என்ன சொல்லுறீங்க ..? போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா..?

Advertisement

Bal Jeevan Bima Rural Postal Life Insurance Plan in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் எதிர் கால சேமிப்பு பற்றிய அதிக விழிப்புணர்வு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக தங்களின் குழந்தைகளுக்காக எதிர் காலத்திற்கு சேமிப்பது பற்றியும் அதிக அளவு விழிப்புணர்வு வந்துள்ளது. இதற்கு காரணம் இன்றைய சூழலிலேயே பொருளாதார ஏற்ற இறக்கங்கள் அதிக அளவு உள்ளதே நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் எவ்வளவு இருக்கும் என்ற அச்சம் தான். ஆனால் எந்த திட்டத்தில் சேமித்தால் அதிக முதிர்வுத்தொகை கிடைக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வதில் தான் பலருக்கும் சந்தேகம் உள்ளது. அப்படி உங்களுக்கும் சந்தேகம் உள்ளதா..? என்றால் இந்த பதிவு உங்களுக்குத் தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Rural Postal Life Insurance Bal Jeevan Bima Scheme பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

RPLI Children Policy (Bal Jeevan Bima) in Tamil:

இந்த பாலிசியை (Bal Jeevan Bima) என்றும் அழைப்பார்கள். பாலிசிதாரரின் குழந்தைகளுக்கு காப்புறுதி காப்பீடு வழங்குவதற்காக இந்த திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது இதில் பிரதான பாலிசிதாரராக குழந்தையின் பெற்றோர் தான் இருப்பார். ஆனால் முதிர்வுத்தொகை பாலிசிதாரரின் குழந்தைகளுக்குத் தான் சேரும்.

இந்த பாலிசியில் எடுப்பதன் மூலம் உங்கள் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் பயன் பெறலாம். இது ஒரு முதலீட்டு மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கொள்கை ஆகும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் இப்படி ஒரு அருமையான திட்டம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே

இந்த பாலிசியில் 5 – 20 வயது வரை உள்ள குழந்தைகள் இணைந்து கொள்ளலாம். ஆனால் இதில் முக்கியமாக பாலிசிதாரர் அதாவது குழந்தைகளின் பெற்றோர் 45 வயதை அடைந்திருக்க கூடாது.

நன்மைகள்:

இதில் கவரேஜ் தொகையாக அதிகபட்சம் 3 லட்சம் அல்லது குறைவாகவும் க்ளைம் செய்து கொள்ள முடியும்.

மற்ற பாலிசிகளைப் போல, இந்த திட்டத்தில் கடன் வாங்க முடியாது.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.

இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்து விட்டால், பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை.

அதுவே குழந்தை இறந்து விட்டால், உறுதி செய்யப்பட்ட போனஸ் மற்றும் உறுதியளிக்கப்பட்ட தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

பெற்றோருக்கான பாலிசி காலவரை முடிந்த பின் உங்களின் குழந்தைக்கு தான் பாலிசியில் பெறப்பட்ட போனஸ் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட தொகை வழங்கப்படும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> போஸ்ட் ஆபீஸின் அசத்தலான ஆயுள் காப்பீடு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil

 

Advertisement