Bank of India FD Scheme
நாம் அனைவரும் சிறு வயதில் சேமிப்பு பற்றி கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய காலக்கட்டத்தில் நாமும் பெரியவர்களாக மாறி சேமிக்க வேண்டும் என்று தான் நினைத்து இருப்போம். ஆனால் பெரியவர்களாக வளர்ந்த பிறகு நாம் சேமிப்பினை பற்றி யோசித்தாலும் கூட அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் அப்படியே விட்டு விடுகின்றோம். ஆனால் ஆரம்பத்தில் நமக்கு சேமிப்பு என்பது முக்கியமானதாக இல்லாமல் இருந்தாலும் கூட முதிர்வு காலத்தில் அவசியமான ஒன்றாக உள்ளது. ஒருவேளை இனி வரும் காலங்களில் சேமிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கான ஒரு பயனுள்ள ஒரு சேமிப்பு திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..! மேலும் இந்த திட்டமானது பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டம் ஆகும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
பேங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட் தமிழ்:
வயது வரம்பு:
Bank of India-வில் உள்ள இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த மக்கள் அனைவரும் சேரலாம். மேலும் இதில் அதிகப்பட்ச வயதாக 55-ற்குள் இருக்க வேண்டும்.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பணத்தினை சேமிக்க வேண்டும் என்று விரும்பினால் உங்களுக்கான குறைந்தப்பட்ச சேமிப்பு தொகை 5,000 ரூபாய் ஆகும். மேலும் அதிகப்பட்ச தொகையாக 2 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதம் 3% முதல் 7.5% வரை அளிக்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதம் ஆனது முதிர்வு காலம் மற்றும் சீனியர் சிட்டிசன், பொதுமக்களுக்கு ஏற்றவாறு மாறுபடும்.
New Schemes👉👉 பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும்.
முதிர்வு காலம்:
இத்தகைய திட்டத்திற்கான முதிர்வு காலமாக 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் உள்ளது. ஆகையால் இதில் உங்களுக்கு தேவையான முதிரர்வு காலத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு.?
மேலே சொல்லப்பட்டுள்ள விதிகளின் படி ஒரு நபர் இந்த திட்டத்தில் 2,00,000 ரூபாய் முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று கீழே அட்டவணையின் படி கொடுக்கப்பட்டுள்ளது.
Bank of India FD Scheme | ||||
General Citizen | Senior Citizen |
|||
சேமிப்பு தொகை | வட்டி தொகை | அசல் தொகை | வட்டி தொகை | அசல் தொகை |
2,00,000 ரூபாய் | 67,645 ரூபாய் | 2,67,645 ரூபாய் | 77,249 ரூபாய் | 2,77,249 ரூபாய் |
New Schemes👉👉 தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |