Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும்..

Advertisement

Bank of India Rd Scheme Eligibility

நம் முன்னோர்களின் காலத்தில் சம்பாதிக்கின்ற பணத்தை அன்றைய நாள் செலவு போக மீதி தொகையை வீட்டிலேயே தான் வைத்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிலேயே வைத்தால் மறுநாள் செலவு செய்து விடுவோம். அதனால் தான் பல திட்டங்களை பற்றி ஆராய்ந்து கொண்டு வருகின்றோம். எந்த திட்டத்தில் சேர்ந்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்து கொண்டு தான் சேமிக்க ஆரம்பிக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் BOI வங்கியின் RD திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Bank of India Rd Scheme:

Bank of India Rd Scheme in tamil

boi வங்கியின் திட்டத்தில் Rd திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.

இந்த கணக்கிற்கு 6 மாதம் முதல் 120 மாதம் கொடுக்கப்படுகிறது.

இதற்கான வட்டி தொகையாக 5.30% முதல் 5.80% வரை வழங்கப்படுகிறது. வட்டியை ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது.

வட்டி தொகை:

பதவிக்காலம்  பொது மக்களுக்கு வட்டி  மூத்த மக்களுக்கான  வட்டி 
180 நாட்கள் – 269 நாட்கள் 4.35% 5.85
270 நாட்கள் – 364 நாட்கள் 4.35% 5.85%
1 வருடம் – 1 வருடம் 364 நாட்கள் 5.00% 5.50%
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் 5.05% 5.55%
3 ஆண்டுகள் – 4 ஆண்டுகள் 364 நாட்கள் 5.05% 5.50%
5 ஆண்டுகள் – 7 ஆண்டுகள் 364 நாட்கள் 5.05% 5.55%
8 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் 5.05% 5.55%

 

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும். 

தேவையான ஆவணங்கள்:

  • முகவரி சான்று
  • வாக்காளர் அடையாள அட்டை
  • பான் கார்டு
  • அரசு அடையாள அட்டை
  • ஓட்டுனர் உரிமம்
  • மூத்த குடிமக்கள் அடையாள அட்டை
  • ரேஷன் கார்டு

Rd திட்டத்தில் சேர்ந்தால் 10 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

பொதுமக்கள்:

டெபாசிட் தொகை  வட்டி தொகை  சேமித்த  தொகை  முதிர்வு தொகை
Rs.1000 /- Rs.36,174/- Rs.1,20,000/- Rs.1,56,174/-
Rs.3000 /- Rs.1,08,523/- Rs.3,60,000/- Rs.4,68,523/-
Rs.5000/- Rs.1,80,872/- Rs.6,00,000/- Rs.7,80,8726/-

சீனியர் சிட்டிசன் 

டெபாசிட் தொகை வட்டி தொகை சேமித்த  தொகை முதிர்வு தொகை
Rs.1000 /- Rs.40,454/- Rs.1,20,000/- Rs.1,60,454/-
Rs.3000/- Rs.1,21,362/- Rs.3,60,000/- Rs.4,81,362/-
Rs.5000/- Rs.2,02,269/- Rs.6,00,000/- Rs.8,02,269/-

 

தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement