மார்ச் 31 தேதிக்குள் மிஸ் பண்ணீடாதீங்க..! 400 நாட்களில் 50,000-திற்கு மேல் வட்டி கிடைக்கும் அருமையான இரண்டு திட்டங்கள்

Advertisement

Best Fixed Deposit Schemes for Sbi and Indian Bank in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே தனது எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமும் கவனமும் வந்து விட்டது. ஆனால் எந்த வகையான திட்டத்தில் முதலீடு செய்தால் அல்லது சேமித்தால் நல்ல வட்டியும் முதிர்வு தொகையும் கிடைக்கும் என்பதில் தான் பலருக்கும் பெரிய குழப்பம் இருக்கும். அப்படி உங்களின் மனதிலேயும் இந்த மாதிரியான குழப்பம் உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆம் நண்பர்களே உங்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் அருமையான சேமிப்பு திட்டம் பற்றி முழுவிவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் SBI வங்கி மற்றும் Indian Bank-ல் உள்ள இரண்டு அருமையான Fixed Deposit Schemes பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த Schemes உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதில் முதலீடு செய்து நல்ல முதிர்வு தொகையினை பெற்று கொள்ளுங்கள்..!

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 555 நாட்களில் Rs.59,987/- வட்டியாக பெறக்கூடிய அருமையான திட்டம் இது மார்ச் – 31-ம் தேதி தான் கடைசி தேதி

SBI Bank Latest Fixed Deposit Scheme in Tamil:

SBI Bank Latest Fixed Deposit Scheme in Tamil

இதனை Amrit Kalash Fixed Deposit Scheme என்றும் அழைக்கலாம். இதில் நீங்கள் மார்ச் 31-க்குள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் உள்நாட்டு மற்றும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களும் முதலீடு செய்யலாம்.

இதில் குறைந்த பட்சமாக 1,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கால அளவு 400 நாட்கள் தான். 400 நாட்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற அளவில் வட்டி மற்றும் முதிர்வு தொகையினை பெற்று கொள்ளலாம்.

நன்மைகள்:

நீங்கள் ஏற்கனவே SBI வங்கியில் ஏதேனும் Fixed Deposit செய்திருந்தீர்கள் என்றால் அதனின் முதிர்வு தொகையினை இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் நீங்கள் கடனும் பெற்று கொள்ள முடியும்.

இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் நீங்கள் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 7.10% வட்டியும் அதுவே நீங்கள் 60 வயதிற்கு அதிகமான அதாவது Senior Citizen-களுக்கு 7.60% வட்டியும் வழங்கப்படுகின்றது.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம் மார்ச் 31 கடைசி தேதி

இந்த திட்டத்தில் கிடைக்கும் வட்டி தொகையினை நீங்கள் உங்களின் Savings Account-க்கு மாற்றி கொள்ளலாம்.

நீங்கள் ஏதவாது ஒரு SBI வங்கியின் கிளை இந்த திட்டத்தில் இணைந்தாலும் நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த ஒரு SBI வங்கியின் கிளைக்கும் இந்த திட்டத்தில் உள்ள பணத்தை Transaction செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்படுகின்றது.

உதாரணமாக நீங்கள் இந்த திட்டத்தில் 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 47,534 ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது 400 நாட்கள் கழித்து முதலீடு மற்றும் வட்டி தொகையும் சேர்த்து 6,47,534 ரூபாய் கிடைக்கும்.

இதுவே நீங்கள் Senior Citizen-ஆக இருந்தால் உங்களுக்கு 50,988 ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது 400 நாட்கள் கழித்து முதலீடு மற்றும் வட்டி தொகையும் சேர்த்து 6,50,988 ரூபாய் கிடைக்கும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபிஸில் 95 ரூபாய் முதலீடு செய்தால் 14 லட்சம் வரை கிடைக்குமா

Indian Bank Latest Fixed Deposit Scheme in Tamil:

Indian Bank Latest Fixed Deposit Scheme in Tamil

இதனை IND SHAKHI 555 DAYS Fixed Deposit Scheme என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் நீங்கள் மார்ச் 31-க்குள் முதலீடு செய்ய வேண்டும்.

இதில் குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தின் கால அளவு 555 நாட்கள் தான். 555 நாட்கள் கழித்து நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு ஏற்ற அளவில் வட்டி மற்றும் முதிர்வு தொகையினை பெற்று கொள்ளலாம்.

நன்மைகள்:

இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தீர்கள் என்றால் நீங்கள் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 7% வட்டியும் அதுவே நீங்கள் 60 வயதிற்கு அதிகமான அதாவது Senior Citizen-களுக்கு 7.50% வட்டியும் வழங்கப்படுகின்றது.

உதாரணமாக நீங்கள் இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 60 வயதிற்கு குறைவான வயதுடையவர் என்றால் உங்களுக்கு 55,808 ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது 555 நாட்கள் கழித்து முதலீடு மற்றும் வட்டி தொகையும் சேர்த்து 5,55,808 ரூபாய் கிடைக்கும்.

இதுவே நீங்கள் Senior Citizen-ஆக இருந்தால் உங்களுக்கு 59,987 ரூபாய் வட்டி கிடைக்கும். அதாவது 555 நாட்கள் கழித்து முதலீடு மற்றும் வட்டி தொகையும் சேர்த்து 5,59,987 ரூபாய் கிடைக்கும்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> என்னது போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இவ்வளவு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா இத்தனை நாளா இது தெரியாம போச்சே

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

 

Advertisement