ஆண்களுக்கு 1000 ரூபாய் முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் அருமையான 3 சேமிப்பு திட்டம்..!

best post office scheme for boy child in tamil

ஆண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்கள்

பொதுவாக இத்தனை நாட்கள் பெண் குழந்தைகளுக்கு என்று நிறைய சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீடு திட்டங்கள் போஸ்ட் ஆபிஸில் கேள்வி பட்டு அதில் சேமிக்க தொடங்கி இருப்பீர்கள். அது மாதிரி இனி நீங்கள் ஆண் குழந்தைகளுக்கும் அவர்களுடைய எதிர் காலத்தை பற்றி சிந்தித்து சேமிக்க தொடங்கலாம். போஸ்ட் ஆபிஸில் ஆண் குழந்தைகளுக்கு உள்ள சேமிப்பு திட்டங்கள் என்னென்ன மற்றும் அந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு முதலீடு செய்வது என்று இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ 5 ஆண்டில் 7 லட்சம் வரை லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்..!

Best Post Office Scheme For Boy Child:

ஆண் குழந்தைகளுக்கு இருக்கின்ற அருமையான 5 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் பற்றி ஒவ்வொன்றாக கீழே பார்க்கப்போகிறோம்.

National Savings Certificates Post Office:

national savings certificate post office in tamil

இந்த NAS திட்டத்தினை நீங்கள் எந்த போஸ்ட் ஆபிஸில் வேண்டுமானாலும் புதிதாக தொடங்கலாம். இந்த திட்டம் 1000 ரூபாய் முதலீட்டில் இருந்து தொடங்குகிறது. ஆனால் எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

NAS திட்டத்தின் வட்டி விகிதமானது 6.8% ஆகும். இத்தகைய சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் உள்ள 5 வருடம் சேமிப்பு திட்டம் ஆகும்.

Ponmagan Podhuvaippu Nidhi Scheme in Tamil: 

இரண்டாவதாக நாம் பார்க்கும் திட்டம் பொன்மகன் பொது நிதி திட்டம் ஆகும். 10 வயதிற்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகள் 500 ரூபாய் முதலீட்டில் இந்த திட்டத்தின் மூலம் சேமிக்க தொடங்கலாம்.

இத்தகைய பொன்மகன் திட்டமானது 500 ரூபாய் முதல் 1,50,000 லட்சம் வரை முதலீடு செய்து 8.1% வட்டி விகிதத்துடன் 15 வருடம் வரை தொடரக்கூடிய திட்டம் ஆகும்.

5 வருடங்கள் கழித்த இந்த திட்டத்தின் கீழ் உங்களுடைய குழந்தையின் பெயரில் குறிப்பிட்ட அளவிலான கடன் தொகையினை பெற்று கொள்ள முடியும். அதுமட்டும் இல்லாமல் 7 ஆண்டில் முதலீடு செய்த தொகையில் பாதையினை பெற்று கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 4950 ரூபாய் வருமானம் தரும் Post Office சேமிப்பு திட்டம்

Post Office Monthly Income Scheme in Tamil:

post office monthly income scheme in tamil

நீங்கள் உங்களுடைய ஆண் குழந்தை பெயரில் Post Office Monthly Income Scheme தொடங்க வேண்டும் என்றால் முதலில் போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்து இருக்க வேண்டும்.

அதன் பிறகு 1000 ரூபாய் முதலீடு முதல் 4,50,000 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்து இந்த திட்டத்தினை தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 6.6% ஆகும். 1000 ரூபாய் முதலீட்டில் தொடங்க கூடிய இந்த திட்டமானது 5 வருடம் வரை நீட்டிக்க கூடியதாகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்.. 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil