Best Post Office Scheme in Tamil
இன்றைய சூழலில் ஒருவரது வாழ்க்கை மிகவும் சுமுகமான சூழலில் நடக்க வேண்டும் என்றால் அதற்கு மிக மிக முக்கியமாக தேவைப்படுவது பணம் தான். அதனால் அந்த பணத்தை அனைவருமே தங்களது வசத்தில் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் அனைவருக்குமே தங்களின் தற்போதைய வாழ்க்கைக்காக மற்றும் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸின் NSC திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க..
Post Office NSC Scheme Details in Tamil:
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமகன் அனைவரும் சேமிக்கலாம். 18 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் பெற்றோர் மூலம் ஜாயிண்ட் அக்கவுண்டாக சேரலாம்.
ஒரு நபர் ஒரு சேமிப்பு பத்திர திட்டம் தான் வாங்க வேண்டும் என்று இல்லை நீங்கள் எத்தனை சேமிப்பு பத்திர திட்டம் வேண்டுமானாலும் வாங்கி சேமிக்கலாம்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் செலுத்தி கணக்கை ஆரம்பிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.7% வரையிலான வட்டி வழங்கப்படுகிறது.
மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து 46,81,320 ரூபாய் வரை கிடைக்கும் அருமையான திட்டம்
Post Office NSC Scheme 5 Lakh Calculator in Tamil:
காலம் | டெபாசிட் தொகை | வட்டி விகிதம் | மொத்த வட்டி தொகை | முதிர்வு தொகை |
5 வருடம் | 5,00,000 | 7.7% | 2,24,517 | 7,24,517 |
இந்தியன் வங்கியில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 3,25,457 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |