ரூ.5,55,000/- வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான சேமிப்பு திட்டம்..!

Advertisement

Best Post Office Scheme in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பதிவில் தினமும் பலவகையான சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவு செய்து வருகின்றோம்.. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பற்றி தான். அஞ்சலக சேமிப்பு திட்டம் என்பது மற்ற சேமிப்பு திட்டங்களை விட மிகவும் பாதுகாப்பானது மற்றும் லாபகரமானது. அவற்றில் ஓன்று தான் அஞ்சலக மாத வருமான சேமிப்பு திட்டம். இதனை ஆங்கிலத்தில் monthly income scheme என்று அழைப்பார்கள். இந்த திட்டத்தில் நாம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் 5,55,000 ரூபாய் தொகையை வட்டியாக பெறலாம். அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ் மாத வருமான சேமிப்பு திட்டம்:

இந்த திட்டத்தில் நீங்கள் ஒரே ஒரு முறை மட்டும் தான் முதலீடு செய்ய முடியும்.

நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு மாதம் மாதம் வட்டி வழங்கப்படும்.

இந்த சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை உங்களிடமே கொடுத்துவிடுவார்கள். அதற்கான வட்டியை மாட்டும் அந்த ஐந்து வருடத்தில் மாதம் மாதம் நீங்கள் பெற்று வரலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் மூத்த குடிமக்களுக்கு 4,23,000 ரூபாய் அளிக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!

இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணைத்து முதலீடு செய்யலாம்.

நீங்கள் தனி நபராக அல்லது கூட்டு கணக்காக இந்த சேமிப்பு திட்டத்தில் கணக்கு திறக்கலாம். அதேபோல் இந்த திட்டத்தில் குழந்தைகள் கணக்கு திறக்க விரும்பினால் மைனர் அக்கவுண்டாக குழந்தையின் பெற்றோர்களின் பெயரில் கணக்கு திறக்கலாம்.

இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000. அதிகபட்ச தொகை என்று பார்த்தால் நீங்கள் தனி நபராக இருந்தால் 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம், கூட்டு கணக்காக அக்கௌன்ட் ஓபன் செய்தால் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

தற்பொழுது இந்த திட்டத்திற்கு 7.40 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ஐந்து வருடத்தில் ரூ.5,55,000/- வட்டி பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

நாம் இந்த மாத வருமான சேமிப்பு திட்டத்தில் 15 லட்சம் முதலீடு செய்தோம் என்றால் இந்த ஸ்கீமினுடைய ஐந்து வருடத்தில் மாதம் மாதம் 9250 ரூபாய் வட்டி கிடைக்கும். மொத்தமாக ஐந்து வருடத்தில் நமக்கு 5,55,000 ரூபாய் வட்டி கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 லட்சம் செலுத்தி 4,34,984 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement