இளம் பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள்

Advertisement

சேமிப்பு திட்டங்கள் 

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்  பெண்களுக்கு பயன்படும் சேமிப்பு திட்டங்களை பற்றித் தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். பெண்கள் சுயமாக சம்பாதிப்பதும், அந்த பணத்தை சரியான முறையில் முதலீடு செய்வது பன்மடங்காக  பெருக்குவதும்  முக்கியமானதாகும். அலுவலகத்தில் பணி புரியும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் சுய தொழில் செய்து வரும் பெண்களும் முதலீடு செய்வதற்காக பல திட்டங்கள் குவிந்து கிடக்கின்றது. அவற்றில் வருமானம் மற்றும் லாபம் தரக்கூடிய பாதுக்கான சேமிப்பு திட்டங்கள் சிலவற்றை நம் பொதுநலம்.காம்  பதிவில் பார்க்கலாம் வாங்க.

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை

பொது வருங்கால வைப்பு நிதி (PPF):

PPF என்பது ஒரு வகையான திட்டமாகும். இது ஒரு இந்திய அரசு வழங்கும் சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டமானது தனிநபர் பயன்பெற இந்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வங்கிகள் மற்றும் அஞ்சலகத்தில் வழங்கப்படும் முதலீட்டு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தது 500 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு வட்டிகள் இந்திய அரசால் நம் கணக்கில் வட்டிகளும் செலுத்தப்டுகிறது. இந்த திட்டம் 15 வருடங்கள் சேமிக்க வேண்டும். ஆனால்  ஐந்து ஆண்டுகள்  முடிந்த பிறகு சேமிப்பு கணக்கை முடித்துக்கொள்ளலாம்.  அதுமட்டுமில்லாமல்  மாத வருமானம் வாங்குபவர்கள் முதலீட்டுடன் சேர்த்து பணி  ஓய்விற்கு பிறகு பாதுகாப்பாக  வாழ்வதற்கும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

பரஸ்பரநிதி ( மியூச்சுவல் பண்ட்): 

மியூட்ச்சுவல் ஃபண்ட் என்பது முதலீட்டாளர் ஒரு குறிப்பிட்ட அமைப்பிடம் தங்களது முதலீட்டை கொடுத்து நீங்கள் பங்குகளில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை எங்களுக்கு பிரித்துக்கொடுங்கள் என்று சொல்வது. அந்த அமைப்பு, அப்படிப்பட்ட முதலீடுகள் குறித்து விவரம் தெரிந்த, அனுபவம் உள்ள ஒருவரை வேலைக்கு அமர்த்தி, பலரும் கொடுத்த பணத்தை முதலீடு செய்யச் சொல்வார்கள். அவர் முதலீடு செய்வார். ஆண்டு இறுதியில் லாப நஷ்ட  கணக்குப் பார்த்து, லாபத்தைப் பிரித்துக்கொடுப்பார். தபால் துறையில் உள்ள RD  சேமிப்பை விட  பரஸ்பரநிதியில் வட்டி அதிகமாவே  கிடைக்கிறது.

தங்க நகைகள் சேமிப்பு:

தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதும் வீண்போகாது, பெண்களுக்கு பொதுவாகவே நகை என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் தங்கத்தை நகையாக சேமிப்பது நல்லது.  தங்கம் இருப்பதால் ஒரு சிலருக்கு  தொழில் தொடங்குவதற்கும் உதவியாக இருக்கிறது.

5 ஆண்டு அஞ்சல் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு (RD)

தபால் அலுவலகத்தில் 5 ஆண்டுகள் கால சேமிப்பு திட்டமான RD உள்ளது. மாதம் குறைந்தபட்சமாக 100 செலுத்தலாம்.  5 ஆண்டுகளில் கணக்கை முடித்தால் 5.8 சதவீதம் வட்டிகள் கிடைக்கும். இந்த வட்டி விகிதம் வருடத்திற்கு ஒரு முறை மாற்றம்  அடையும்.

எனவே இதில் குறிப்பிட்ட அனைத்து திட்டங்களையும், நீண்ட கால சேமிப்பு திட்டமாக இளம் வயதில் இருந்தே  செயல்படுத்தினால் எதிர்காலத்தில் அது பெரும் உதவியாக இருக்கும்.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement