விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% அரசு மானியம்..!

Borewell-Scheme-in-Tamil (1)

ஆழ்துளை கிணறு அமைக்க மானியம்..! Borewell Scheme in Tamilnadu..!

Borewell Scheme in Tamil:- வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் விவசாயிகளுக்கான பாசன வசதி திட்டத்திற்கு ரூ.10.19 கோடி நிதி உதவி தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் சிறு குறு விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50% மானியம் வழங்கப்படுகிறது அதை பற்றிய தகவல்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.

ஆழ்துளை கிணறு அமைக்க மானியம் / Borewell Government Scheme..!

Borewell Scheme in Tamil – அரசின் அறிவிப்பு:-

விவசாய குழுக்களுக்கு சமுதாய ஆழ்துளை கிணறு, பம்பு செட்டுகளுடன் பாசன வசதியை உருவாக்கி தரும் திட்டத்திற்காக ரூபாய் 10.19 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதன் மூலம் சாகுபடி பரப்பை அதிகரித்து, விவசாயிகள் அதிக வருமானம் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு பல்வேறு நடடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக சிறு, குறு ஆதிதிராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாய குழுக்களை உருவாக்கி, பம்பு செட்டுகளுடன் சமுதாய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார்.

விவசாயிகளுக்கு பயனுள்ள 6 திட்டங்கள்

முதல் தவணையாக ரூ.6.11 கோடி ஒதுக்கீடு:-

முதல் தவணையாக ரூ.6.11 கோடி ஒதுக்கீடு அதன் படி முதற்கட்டமாக 2020-21 ஆம் நிதி ஆண்டில் 14 மாவட்டங்களில் பாசன வசதி இல்லாத இடங்களில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் அடங்கிய 118 விவசாய குழுமங்கள் பயன்பெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு ரூ.10.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்துவதற்கு. முதல் தவணையாக அரசாணையின் 10.07.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணறு அமைக்க விலை விபரம்:-

அரசாணையின்படி இத்திட்டத்தின் கீழ் 90 மீட்டர் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் 3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

100 மீட்டர் ஆழ்துளை கிணறு அமைக்க அதிகபட்சம் 11 லட்சம் வழங்கப்படுகிறது, 20 மீட்டர் ஆழ்துளை திறந்தவெளி கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.6.5 லட்சம் வழங்கப்படுகிறது.

சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பாம்பு செட்டு அமைப்பதற்கு அதிகபட்சம் ரூ.3.26 லட்சம் வழங்கப்படுகிறது.

மின்சார சக்தி மூலம் இயங்கும் 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு அதிகபட்சமாக ரூ 75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் நிறுவுவதற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் விதிமுறைகள்:-

அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கு மேல் கிணறு அமைக்கவோ அல்லது கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைக்கவோ குழு உறுப்பினர்கள் விரும்பினால், அதற்கான கூடுதல் செலவினை அக்குழுக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாய குழுக்கள் கூட்டுறவு சங்க வழிமுறைகளின்படி தங்கள் குழுக்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் பாசன வசதிகள் மூலம் கிடைக்கும் நீரினை முறையாக இவ்விவசாய குழு உறுப்பினர்கள் அனைவரும் சாகுபடிப் பரப்புக்கேற்றவாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் பாசன அமைப்புகளை பராமரிப்பு மற்றும் அதற்கான மின்சார செலவினை இவ்விவசாய குழு உறுப்பினர்களே பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் நிலங்களில் நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை உருவாக்கி நவீன நுண்ணீர்ப்பாசன அமைப்புகளை முழு மானியத்தில் அமைத்துத் தரப்படும்.

தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக 2020-21 ஆம் ஆண்டில் 1233 சிறு, குறு ஆதிதிராவிட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் ஒன்றிணைத்து சாகுபடினை மேற்கொண்டு அவர்களின் பொருளாதார நிலை மேம்பட வழிவகை ஏற்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப இத்திட்டத்தை இதர மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.

எந்தெந்த மாவட்டங்களில் தற்பொழுது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது:-

அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவள்ளூர், விருதுநகர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் பொதுப்பணித் துறையினால் நிலத்தடி நீர் பாதுகாப்பான குருவட்டம் என கண்டறியப்பட்டு 47 குருவட்டங்களில் 1233 சிறு, குறு ஆதிதிராவிட, பழங்குடின மற்றும் பெண் விவசாயிகளை கண்டறிந்து பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி அவற்றின் மூலம் கிடைக்கும் நீரினை, விவசாய்களுக்கிடையே பங்கிட்டுப் பயன்பெறும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பசு கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி..! 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil