சீனியர் சிட்டிசனுக்கான அருமையான திட்டம்..

Advertisement

Canara Bank Senior Citizen Scheme 2023 in Tamil

மனிதனின் வாழ்க்கையில் சேமிப்பு என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாம் வாழ்நாள் முழுவதும் உழைத்து கொண்டே இருக்க முடியாது. ஒரு 60 வயதிற்கு பிறகு நீங்களால் உழைக்க நினைத்தாலும் உங்களது உடல் ஒத்துழைக்காது. அதனால் தான் நீங்கள் இப்போது சம்பாதிக்கின்ற பணத்தை வருமானம் தர கூடிய திட்டங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் சேமிக்கமால்நமக்கு தான் பிள்ளைகள் இருக்கிறார்களே பார்த்து கொள்வார்கள் என்று நினைக்காதீர்கள். பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் நம்மிடம் பணம் இருந்தால் தான் மதிக்கும். பிள்ளைகளிடம் நீங்கள் ஒன்று அல்லது இரண்டு முறை பணத்தை கேட்கலாம். அதற்கு மேல் கேட்டால் உனக்கு என்ன செலவு இருக்க போகிறது என்று பெற்றோர்களிடம் கோபப்படுவார்கள். அதனால் இன்றைய பதிவில் சீனியர் சிட்டிசனுக்கான திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சீனியர் சிட்டிசனுக்கான திட்டம்:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக கனரா வங்கி உள்ளது. இந்த வங்கியானது 1906-ம் ஆண்டு நிறுவப்பட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது. இதில் நிறைய திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்றான சீனியர் சிட்டிசன் திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும். 

இந்த திட்டத்தில் குறைத்தபட்ச தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 15 லட்சம் வரையிலும் டெபாசிட் செய்யலாம்.

இந்த திட்டத்தின் கால அளவாக 5 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. அதற்க்கு மேல் நீங்கள் நீட்டித்து கொள்ள விருப்பப்பட்டால் 3 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம்.

இதில் 50 வயது எட்டியவர்கள் அல்லது ஓய்வு பெற்றவர்கள் இந்த திட்டத்தில்  பயனடைய தகுதி உடையவராக கருதப்படுகிறார்கள்.

இதற்கு வட்டியாக 7.4% வழங்கப்படுகிறது.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாள சான்று
  • முகவரி சான்று
  • வயது சான்று
  • பாஸ்போர்ட் சைஸ்போட்டோ

எவ்வளவு கிடைக்கும்:

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 2000 ரூபாய் செலுத்துகிறீர்கள். அப்போ நீங்கள் ஐந்து வருடத்தில் சேமிப்பு தொகையாக 1,20,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். இதற்கு வட்டி தொகையாக ஐந்து வருடத்தில் 60,070 ரூபாய் கிடைக்கும். நீங்கள் சேமித்த தொகை மற்றும் வட்டி என சேர்த்து 1,80,070 ரூபாய் கிடைக்கும்.

தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement