Canara Bank Special Deposit Scheme For 666 Days
பொதுவாக நாம் அனைவருமே சேமிக்க நினைப்பது உண்மை தான். ஆனால் நாம் சேமிக்கும் பணத்திற்கு ஏதாவது ஒரு நன்மை இருந்தால் தான் அதை சேமிக்க முன் செல்வோம் அல்லவா..! நாம் அதிகமாக இப்போது போஸ்ட் ஆபிஸில் தான் அதிகம் சேமித்து வருகிறோம். ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கி நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் 666 நாட்களில் 3,43,626 ரூபாய் கிடைக்கும் அருமையான திட்டம். அந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
Canara Bank Special Deposit Scheme For 666 Days in Tamil:
கனரா வங்கியில் FD கணக்கு துவங்க வெறும் 1,000 ரூபாய் போதும். இந்த கணக்கை தொடங்க குறைந்தபட்சமாக 1000 ரூபாயும், அதிகபட்சமாக எந்த தொகையையும் நிர்ணயம் செய்யவில்லை.
வட்டி தொகை:
இந்த கணக்கை துவங்கி அதில் தொகையை சேமித்துவிட்டால் அந்த தொகைக்கான வட்டியை ஒவ்வொரு மாதம், அல்லது 3 மாதத்திற்கு ஒரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை அல்லது, 1 வருடத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் எவ்வளவு காலம் சேமிக்க நினைக்கிறீர்களோ அந்த காலம் முடியும் போது மொத்த தொகையையும் வட்டியையும் சேர்த்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
கடன் வழங்கும் திட்டம்:
இந்த திட்டத்தில் இடையில் கடன் வழங்கும் திட்டமும் உண்டு. அதாவது உங்களின் கணக்கில் சேமித்து எவ்வளவு இருக்கிறீர்களோ அந்த தொகையில் 9 சதவீதம் கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தில் நாமினியும் உண்டு.
LIC -யில் 138 ரூபாய் முதலீடு செய்தால் 13.5 லட்சம் பெறும் சூப்பரான திட்டம் மிஸ் பண்ணிடாதீங்க
வட்டி விகிதம்:
நாட்கள் | 60 வயதிற்கு கீழ் | 60 வயதிற்கு மேல் |
666 | 7 சதவீதம் | 7.50 சதவீதம் |
60 வயதினருக்கு கீழ் உள்ளவர்கள் சேமித்தால்:
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | வட்டி விகிதம் | மொத்தம் |
1,00,000 | 666 | 13,518 ரூபாய் | 1,13,518 ரூபாய் |
60 வயதினருக்கு மேல் உள்ளவர்கள் சேமித்தால்:
டெபாசிட் தொகை | முதிர்வு காலம் | வட்டி விகிதம் | மொத்தம் |
1,00,000 | 666 | 14,542 ரூபாய் | 1,14,542 ரூபாய் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |