Central Bank of India 777 Days Scheme
நம்முடைய சிறு வயதில் இருந்தே சேமிப்பு என்பது பற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால் அதனை நாம் வளர்ந்த பிறகு தான் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் தோன்றும். சரி எப்படியாவது அதனை செயல்படுத்தி ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் சேமித்து நல்ல நிலைக்கு வரலாம் என்று நினைக்கும் போது எந்த திட்டத்தின் கீழ் சேமிப்பது என்பது பலருக்கு ஒரு பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி கடினமாக யோசிக்கும் அனைவருக்கும் அருமையான ஒரு திட்டம் Central Bank of India வெளியிட்டுள்ளது. ஆகவே இந்த திட்டத்தின் மூலம் எப்படி சேருவது மற்றும் அதில் யாரெல்லாம் சேரலாம் என்ற முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ 400 நாட்களில் 5,40,029 ரூபாய் வழங்கும் SBI-யின் திட்டம்.! மார்ச் 31 கடைசி தேதி..
Central Bank of India 777 Days Scheme in Tamil:
சென்ட்ரல் பேங்க் அறிவித்துள்ள இந்த திட்டமானது 777 நாட்களுடன் கூடிய ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தி அனைவரும் பயன்பெறலாம்.
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்த பிறகு திடீரென்று இந்த திட்டத்தை பாதியில் முடித்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்பும் இதில் உள்ளது. ஆனால் அப்படி பெரும் போது உங்களுக்கு வட்டி விகிதத்தில் இருந்து 1% குறைக்கப்பட்டு மீதும் உள்ள தொகை மட்டுமே வழங்கப்படும்.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை 10,000 ரூபாய் மற்றும் அதிகபட்ச தொகை 10 கோடி ரூபாயாகும்.
வட்டி விகிதம்%:
சென்ட்ரல் பேங்க் அறிவித்துள்ள 777 நாட்களுடன் கூடிய இந்த திட்டத்திற்கான பொதுவான வட்டி விகிதம் 7.55% ஆகும். ஆனால் மூத்த குடிமக்கள் மற்றும் சென்ட்ரல் பேங்கில் வேலை செய்பவர்களுக்கு வட்டி விகிதம் வேறுபாடும்.
மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் என்பது 8.05% ஆகும்.
அதுவே சென்ட்ரல் பேங்கில் வேலை செய்யும் பொது நபராக இருந்தால் அவர்களுக்கான வட்டி விகிதம் 7.56% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9.05% வட்டியாகும்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் 777 நாட்கள் ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
Central Bank of India 777 Days Scheme | ||||||
General Citizen | Senior Citizen | Staff Senior Citizen | ||||
முதலீடு செய்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
1 லட்சம் | 17,246 ரூபாய் | 1,17,246 ரூபாய் | 18,476 ரூபாய் | 1,18,476 ரூபாய் | 20,968 ரூபாய் | 1,20,968 ரூபாய் |
மேலே சொல்லப்பட்டுள்ள அட்டவணை முறைப்படி நீங்கள் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 3,93,000 ரூபாய் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |