வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் PPF திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…

Updated On: August 4, 2023 7:55 AM
Follow Us:
central bank of india providend fund scheme in tamil
---Advertisement---
Advertisement

PUBLIC PROVIDENT FUND SCHEME IN CENTRAL BANK OF INDIA 

நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தில் உள்ள ஒரு பகுதியினை எதிர்காலத்திற்காக சேமித்து வருகிறோம். அப்படி நாம் சேமித்து வைக்கும் பணமானது பிற்காலத்தில் நமக்கு ஏதோ ஒரு வகையில் பயன் அளிக்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறு நம்முடைய எதிர்காலத்திற்காக பயன்படும் பணத்தினை ஒரு நிதிநிறுவனத்தில் சேமித்து வைத்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு முதலீடு செய்த தொகையுடன் சேர்த்து வட்டி தொகையும் கிடைக்கும். ஆகையால் நாம் எந்த ஒரு நிதிநிறுவனத்தில் முதலீடு செய்தாலும் அதில் உள்ள அனைத்து தகவலையும் நன்றாக தெரிந்துக்கொண்டு தான் அதன் பின்னரே முதலீடு செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று central bank of india வங்கியில் PPF scheme-ல் இணைவது எப்படி? அந்த திட்டத்தால் நாம் பெறக்கூடிய பலன்கள் எவ்வளவு என்பதை இந்தப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

சென்ட்ரல் பேங்க்கில் உள்ள PPF திட்டம்:

PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதித்திட்டம் ஒரு தனிநபர் காலப்போக்கில் கணிசமான ஒரு தொகையை உருவாக்கவும், அந்தத் தொகைக்கு வரிசலுகையும் அளிக்கிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் PPF கணக்கின் அம்சங்கள்:

யார் இந்த PPF கணக்கை திறக்கலாம் ?

18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள்.

PPF வைப்புத்தொகை எவ்வளவு ?

ஒரு நபர் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு INR 500 முதல் INR 150,000 வரை வைப்புத்தொகையாக செலுத்தலாம். வைப்புத்தொகையை மொத்தமாகவோ அல்லது தவணையாகவோ கட்டலாம். மேலும் ஒரு நபர் ஒரு கணக்கை தான் இந்த திட்டத்தில் திறக்க முடியும்.

CBI -ல் PPF யின் வட்டிவிகிதம்:

2023 ஆம் ஆண்டில் PPF-ன் வட்டி 7.2% ஆகும். இந்திய அரசு ஒவ்வொரு காலாண்டிலும் வட்டியை மாற்றியமைக்கும். இந்த 7.2% வட்டி 01.07.2023 முதல் 30.09.2023 வரை கணக்கை தொடங்குபவருக்கு பொருந்தும்.

சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 1.5 லட்சம் செலுத்தினால் மொத்த வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு..?

முதிர்வு காலம்:

PPF வைப்புத்தொகை கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு கணக்கை வைத்திருக்க வேண்டும். ஒருவர் தனது PPF கணக்கின் காலத்தை 15 ஆண்டுகள் பிறகு  5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். அப்படி நீட்டித்த காலத்திற்கு எந்த கூடுதல் தொகையையும் செலுத்த வேண்டாம் என்பது போன்ற சலுகைகளும் பெறலாம்.

ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் வட்டிக்கணக்கில் வரவுவைக்கப்படும்.

PPF கணக்கை முன்கூட்டியே முடிப்பதற்கான காரணங்கள்: 

ஒருவர் கணக்கை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே கணக்கை முடிப்பது அனுமதிக்கப்படுகிறது.

  • ​​கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவரை சார்ந்தோருக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் ஏற்பட்டால்.
  • கணக்கு வைத்திருப்பவர் அல்லது அவரை சார்ந்திருக்கும் குழந்தைகளின் உயர் கல்விக்கு.
  • கணக்கு வைத்திருப்பவரின் இருப்பிடம் வேறு ஒரு நாட்டிற்கு மாறினால் அவர் ஆரம்பித்த கணக்கு முடிவுக்கு கொண்டுவரலாம்.

அதற்கு போதுமான தகவல்களை வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு முன்கூட்டியே ஒருவரின் கணக்கு முடிவிற்கு வந்தால் அவருக்கு வழங்கப்பட்ட வட்டியில் இருந்து 1% வட்டி குறைக்கப்படும்.
PPF கணக்கில் செலுத்தப்படும் தொகைக்கும் அதில் இருந்து பெறப்படும் தொகைக்கும் வரி விலக்கு அளிக்கப்படும்.

PPF முதலீடு பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

இத்திட்டத்தில் எவ்வளவு ரூபாய் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்..

எடுத்துக்காட்டாக:

வருடாந்திர சேமிப்பு தொகை: 12,000 ரூபாய்

வட்டி விகிதம்: 7.1%

முதிர்வு காலம்: 15 ஆண்டுகள்

மொத்த முதலீட்டு தொகை: 1,80,000 ரூபாய் 

மொத்த வட்டி தொகை: 1,45,457 ரூபாய்

முதிர்வு தொகை: 3,25,457ரூபாய்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement

Sureka

நான் சுரேகா pothunalam.com தளத்தில் Content creator ஆக இருக்கின்றேன். நான் Life Style, Business, Banking போன்ற தகவல்களை இந்த தளத்தின் வழியை எழுதி வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!

Gram Santosh Full Details in Post Office Tamil

1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..!

ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்..!

tahdco Loan Scheme In Tamil

தாட்கோ கடனுதவி பெறுவது எப்படி..! | Tahdco Loan Scheme in Tamil

அன்னபூர்ணா திட்டம்

பெண்களுக்காக 50,000 கடன் வழங்கும் அன்னபூர்ணா திட்டம்!

post office selva magal scheme 2023 in tamil

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் கிடைக்கும் அசல் தொகை எவ்வளவு தெரியுமா..?

free cow shed scheme in tamil

தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் 2025