Central Bank of India Rd Scheme
நம் முன்னோர்களின் காலத்தில் பணத்தை சம்பாதித்து அன்றைய நாள் செலவை மட்டும் தான் பார்த்து கொண்டார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பணத்தை சம்பாதிப்பதை விட அதை பயனுள்ள வகையில் சேமிக்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். சேமிப்பு திட்டங்களை பற்றி ஆராய்கின்றனர். நாம் ஒரு திட்டத்தில் கணக்கை திறக்க போகிறோம் என்றால் அந்த திட்டத்தை பற்றிய தகவலை முழுமையாக அறிந்து கொண்டு சேர வேண்டும். ஏனென்றால் திட்டத்தில் சேர்ந்த பிறகு இவ்வளவு தான் வட்டி கிடைக்கும் என்று தெரிந்தால் நீங்கள் சேமித்த தொகை வீணாகி விடும். அது போல வேற ஏதவாது திட்டத்தில் சேர்ந்திருக்கலாமோ என்று எண்ணுவீர்கள். அதனால் இந்த திட்டத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா rd திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl |
Central Bank of India Rd Scheme:
இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். இதில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும், அதிகபட்சம் 50,000 ரூபாய் வரையும் டெபாசிட் செய்யலாம்.
இந்த திட்டத்தின் டெபாசிட் காலமாக 6 மாதம் முதல் 120 மாதம் வரை கொடுக்கப்படுகிறது.
Rd திட்டத்தில் 4.25% முதல் 5.50% வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் வட்டி கணக்கிடப்படுகிறது.
இந்த திட்டத்திலிருந்து நீங்கள் 90% வரை கடன் பெற்று கொள்ளும் வசதியும் இருக்கிறது.
வட்டி:
கடன் காலம் | பொதுமக்களுக்கான வட்டி | மூத்த குடிமக்களுக்கான வட்டி |
180 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை | 4.25% | 4.75% |
1 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை | 5% | 5.50% |
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போஸ்ட் ஆபீசில் 10,000 ரூபாய் கட்டினால் எவ்வளவு அசல் கிடைக்கும்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்:
பொதுமக்கள்:
நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் செலுத்தி வந்தால் 5 வருடத்தில் 3,60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். 10 வருடத்தில் இதற்கு வட்டியாக 1,07,265 ரூபாய் கிடைக்கும். சேமித்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 10 வருடத்தில் முதிர்வு தொகையாக 4,67,265 ரூபாய் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள்:
நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் 3000 ரூபாய் செலுத்தி வந்தால் 5 வருடத்தில் 3,60,000 ரூபாய் சேமித்திருப்பீர்கள். 10 வருடத்தில் இதற்கு வட்டியாக 1,20,056 ரூபாய் கிடைக்கும். சேமித்த தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து 10 வருடத்தில் முதிர்வு தொகையாக 4,80,056 ரூபாய் கிடைக்கும்.
தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |