Senior Citizen Scheme in Central Bank of India
ஒரு மனிதன் பிறந்த நாட்கள் முதல் இறக்கும் கடைசி நாட்கள் வரை எண்ணற்ற பருவ நிலைகளை கடந்து வர வேண்டிய சூழல் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அந்த வகையில் நாம் சிறியவர்களாக இருக்கும் போதும் அம்மா, அப்பாவினை சார்ந்து இருக்கின்றோம். அதுவே வளர்ந்து முடிந்த வேலைக்கு சென்ற பிறகு நாம் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய முடியாது என்பது சாத்தியமான ஒன்று. ஏனென்றால் அப்போது நாம் தான் சுயமாக சம்பாதித்து குடும்பத்தை மேலோங்கி கொண்டு வர வேண்டும். இவ்வாறு நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஏதோ ஒரு பங்கினை சேர்த்து வைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நமக்கான தேவையினை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இத்தகைய முறையினை செய்வதற்கு முதலில் நாம் ஒரு திட்டத்தில் சேர வேண்டும். எதிர்கால தேவையினை ஒப்பிட்டு பார்க்கும் போதும் சீனியர் சிட்டிசன் திட்டம் என்பது உகந்த ஒன்றாக கருதப்படுகிறது. எனவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் உள்ள சீனியர் சிட்டிசன் திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
சென்ட்ரல் பேங்க்கில் உள்ள மூத்த குடிமக்கள் திட்டம்:
இத்திட்டத்தில் படத்தில் மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளின் படி இத்தகைய வயது வரம்பினை உடையவர்கள் யார் வேண்டுமானாலும் 1000 ரூபாய் முதல் 30,00,000 வரை எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
மேலும் உங்களின் சேமிப்பு தொகையினை ஒற்றை பிரிமீயமாக தான் செலுத்த வேண்டும்.
சீனியர் சிட்டிசனுக்கான அருமையான திட்டம்..
வட்டி விகிதம்:
சீனியர் சிட்டிசனிற்கான வட்டி விகிதமாக தற்போது 8.2% ஆனது வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதங்களில் அடிக்கடி மாறுபாடு இருந்தாலும் கூட நீங்கள் கணக்கை தொடங்கும் போது உள்ள வட்டி தான் அளிக்கப்படும்.
மேலும் ஒரு நபர் ஒரே ஒரு கணக்கினை தான் இந்த திட்டத்தில் திறக்க முடியும். அதே சமயம் கூட்டு நபர்களின் அடிப்படையில்இதில் சேமிக்கலாம்.
முதிர்வு காலம்:
உங்களுடைய சேமிப்பிற்கான முதிர்வு காலம் 5 வருடம். மேலும் இந்த கணக்கினை நீங்கள் தொடர வேண்டும் என்று நினைத்தால் 3 வருடத்திற்கான வாய்ப்பும் உள்ளது.
இத்திட்டத்தில் எவ்வளவு ரூபாய் சேமித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா..?
எடுத்துக்காட்டாக:
சேமிப்பு தொகை: 1,50,000 ரூபாய்
வட்டி விகிதம்: 8.2%
3 மாதத்திற்கான வட்டி தொகை: 3,075 ரூபாய்
மொத்த வட்டி தொகை: 61,500 ரூபாய்
அசல் தொகை: 2,11,500 ரூபாய்
தபால் துறையில் மாதந்தோறும் 6167 ரூபாய் வருமானம் தரும் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |