Easy money saving tips in tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. நமது வாழ்க்கையில் சேமிப்பு என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது நான் நமது எதிர்காலத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். அந்த வகையில் நீங்கள் தினமும் இந்த முறையில் சேமித்து அந்த தொகையை மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து வந்தோம் என்றால் கண்டிப்பாக நல்ல லாபத்தை பெற முடியும். அந்த வகையில் ஐந்து வருடத்தில் நான்கு லட்சம் ரூபாய் வரை பெறுவதற்கு ஒரு அருமையான சேமிப்பு முறையை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம், சரி வாங்க அது எப்படி என்று இப்பொழு நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
5 வருடத்தில் 4 லட்ச ரூபாய் சேமிக்க இப்படி செய்து பாருங்கள்.
நீங்கள் தினமும் சம்பாதிப்பவரோ அல்லது வாரம் வாரம் சம்பாதிப்பவரோ அல்லது மாத சம்பளம் வாங்குபவரோ இந்த மூன்று வகையில் எதுவாக இருந்தாலும் சரி. இந்த சேமிப்பு முறை உங்களுக்கு பொருந்தும்.
தினம் சம்பளம் வாங்குபவர் உங்களால் முடிந்தால் 200/- ரூபாயை சேமித்து வைத்து வாருங்கள்.
அதேபோல் வார சம்பளம் வாங்குபவர் 1500/- ரூபாயை சேமிப்பது வைத்து வாருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையின் பிக்ஸடு டெபாசிட் திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு மெச்சுரிட்டி தொகை கிடைக்கும்..!
மேலும் மாதம் சம்பளம் வாங்குபவர் உங்கள் சம்பளத்தில் 6000/- ரூபாயை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தினம் சம்பளம் வாங்குபவர் மற்றும் வார சம்பளம் வாங்கிப்பவர் ஆகிய இருவருமே ஒரு மாதம் வரை அவ்வாறு சேமித்து வைத்து வந்தால் உங்களிடம் 6000/- ரூபாய் இருக்கும்.
ஆக இந்த 6000/- ரூபாயை நீங்கள் ஒவ்வொரு மாதம் என்ற வீதம் 5 வருடம் சேமிக்க வேண்டிம். இவ்வாறு சேமிக்கும் பணத்தை அஞ்சலக சேமிப்பு திட்டமான ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் மாதம் மாதம் 6000/- ரூபாய் டெபாசிட் செய்து வாருங்கள். இந்த திட்டத்திற்கான முதலீட்டு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
இந்த திட்டத்திற்கு தற்பொழுது 6.7% வழங்கப்பட்டு வருகிறது. ஆக ஐந்து வருடம் இந்த RD-யில் மாதம் 6000/- ரூபாய் என்ற வீதம் செய்தி வந்தால். ஐந்து வருடத்தில் நீங்கள் 3,60,000/- ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு 6.7% வட்டியாக 68,197/- ரூபாய் வழங்கப்படும். ஆக நீங்கள் முதலீட்டு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டியும் செய்து 4,28,197/- ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.5,55,000/- வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் மாத வருமான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |