7 ஆண்டில் Rs.15,14,500/- ரூபாய் தரும் மத்திய அரசின் அசத்தல் சேமிப்பு திட்டம்..! RBI FSRB Scheme Higher Return Tamil..!
Floating Rate Saving Bond Scheme in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை இந்திய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. ஆக உங்களிடம் ஒரு மொத்தமான தொகை இருந்து அந்த தொகைக்கு நல்ல ஒரு வட்டிவிகிதத்தை பெற விரும்பினால் இந்திய ரிசர்வ் வங்கியின் Floating Rate Saving Bond Scheme-யில் நீங்க முதலீடு செய்யலாம். இன்று நாம் இந்த Floating Rate Saving Bond Scheme பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து விவரங்களை அறியலாம்.
Floating Rate Savings Bonds Scheme in Tamil:
இந்திய ரிசர்வ் வங்கியின் Floating Rate Saving Bond Scheme-யில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்திய குடிமக்கள் இணையலாம்.
இந்த திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இத்திட்டத்தில் இணைந்த ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கு ஒரு முறை நீங்கள் முதலீடு தொகைக்கான வட்டியை பெறலாம்.
இந்த Floating Rate Saving Bond Scheme-யின் கால அளவு 7 ஆண்டுகள் ஆகும். இந்த 7 வருடத்தில் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த திட்டத்திக்கான வட்டியை நீங்கள் பெறலாம். 7 வருடம் முடிந்தபிறகு நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தீர்களே அந்த தொகையை 100% கேரண்டியுடன் மீண்டும் பெற முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 42 ரூபாய் செலுத்தினால், Rs.5,30,000/- பெறலாம்..! உட்றாதீங்க நண்பர்களே..!
மேலும் இந்த Floating Rate Saving Bond Scheme-யில் இணைய விரும்புபவர்கள் RBI வங்கியில் மட்டும் இல்லாமல் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கியில் இணையலாம். இந்த திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் எவ்வளவு என்றால் 7.35% ஆகும். இந்த வட்டி விகிதத்தை RBI வங்கி ஒவ்வொரு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைப்பார்கள்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
முதலீட்டு தொகை | 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் வட்டி | மொத்தமாக 7 வருடம் வழங்கப்பட்டிருக்கும் வட்டி | மொத்த தொகை |
1 லட்சம் | 3,675/- | 51,450/- | 1,51,450/- |
2 லட்சம் | 7,350/- | 1,02,900/- | 3,02,900/- |
3 லட்சம் | 11,025/- | 1,54,350/- | 4,54,350/- |
5 லட்சம் | 18,375/- | 2,57,250/- | 5,57,250/- |
10 லட்சம் | 36,750/- | 5,14,500/- | 15,14,500/- |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 1,000 ரூபாய் செலுத்தி 2,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கக்கூடிய ஒரு அருமையான சேமிப்பு திட்டம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |