தமிழக அரசின் இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் 2022

free cow shed scheme in tamil

கொட்டகை அமைத்தல்

வணக்கம் நண்பர்களே.! அரசாங்கம் நமக்கு பயனுள்ள வகையில் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. அந்த வகையில் மாடு வைத்திருப்பவர்களுக்கு இலவசமாக மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.இந்த திட்டத்தினை பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

மாட்டு கொட்டகை மானியம் 2022:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மாட்டு கொட்டகை அமைப்பதற்கு முதலில் அவர்களிடம் மாடுகள் இருக்க வேண்டும். நான்கு மாடுகள் வைத்திருந்தால் 79,000 ரூபாய் வழங்கப்படும். நான்கு  மாடுகளுக்கு மேல் இருந்தால் 2 இலட்சத்து பத்தாயிரம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள் ⇒ வாங்க விண்ணப்பிக்கலாம்..! இலவச கறவை மாடு வழங்கும் திட்டம்..! 

தேவையான ஆவணங்கள்:

  • ஆதார் அட்டை
  • ரேஷன் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை
  • நூறு நாள் வேலை  அட்டை

தகுதி:

தமிழக அரசு சார்பில் ஆட்டு கொட்டகை திட்டம், கோழி கூண்டு வாங்குவதற்கான எந்த மானியத்தையும் பெற்றிருக்க கூடாது. மாட்டு கொட்டகை அமைக்கும் இடம் உங்களது சொந்த இடமாக இருத்தல் வேண்டும். அதற்கென்று பட்டா தனியாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி.?

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள மாட்டு கொட்டகை அமைப்பதற்கு விண்ணப்பங்கள் கிடைக்கும். இந்த விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்பு அலுவலர்கள் உங்கள் இடத்திற்கு வந்து பார்வையிட்ட பிறகு நீங்கள் தகுதி உள்ளவர்களாக இருந்தால் மாட்டு கொட்டகை அமைப்பதற்கான பணியை மேற்கொள்வார்கள். உங்களிடம் எத்தனை மாடுகள் இருக்கின்றதோ அதற்கு தகுந்தது போல் தான்  மானியம் வழங்குவார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ ஆடு வளர்ப்புக்கு ரூ.4 லட்சம் வரை கடன் அறிவிப்பு!!! எப்படி பெறுவது? முழு விவரம்..!

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉Schemes