இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் 2023
ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு இலவச தையல் இயந்திரம்’ வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் பற்றிய தகவலை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்:
2021 -2022 ஆண்டுகளில் மட்டும் 1.35 கோடி செலவில் 2250 பெண்கள் பயன் அடைந்துள்ளனர். சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் வாயிலாக, தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
யாரெல்லாம் பயன் அடையலாம்:
விதவைகள், கைவிடப்பட்ட மனைவிகள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்கள்
சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதி:
இந்த திட்டத்தில் பயன் அடைய 20 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தையல் நிறுவனத்திடம் இருந்து தையல் பயிற்சி பெற்று சான்றிதழ் இருக்க வேண்டும்.
Lic-யில் 3 லட்சம் செலுத்தினால் 9 லட்சம் கிடைக்ககூடிடய அருமையான பாலிசி..! மிஸ் பண்ணிடாதீங்க..!
ஆண்டு வருமானம்:
குடும்ப ஆண்டு வருமானமாக 12,000 ரூபாயிற்கு கீழ் இருக்க வேண்டும்.
ஆவணங்கள்:
- ஆதார் அட்டை
- ரேஷன் கார்டு
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- கைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- வருமான சான்றிதழ்
- குடியிருப்பு சான்று
- வயது சான்று
- சாதி சான்றிதழ்
- தையல் தொழில் தெரிந்ததற்கான சான்று
- கைவிடப்பட்ட மனைவி சான்றிதழ்
- சமூக சான்றிதழ்
- ஆதரவற்ற விதவை சான்றிதழ்
- ஊனமுற்றோர் மருத்துவ சான்றிதழ்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இந்தப் படிவத்தை அருகில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |