வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது? Free Sewing Machine Scheme in Tamil..!

Updated On: November 8, 2021 11:21 AM
Follow Us:
free sewing machine scheme in tamil
---Advertisement---
Advertisement

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்..! Sathiyavani Muthu Ammaiyar Ninaivu Free Supply of Sewing Machine Scheme..!

Free Sewing Machine Scheme in Tamil:- வணக்கம் நண்பர்களே. இந்த பதிவில் மத்திய மற்றும் மாநில அரசு இணைத்து இலவச தையல் இயந்திரங்களை வழங்குகிறது. அதாவது சமூக நலத் துறை வாயிலாக செயல்படும் சத்தியவாணி முத்து அம்மையார் அவர்களின் நினைவாக தமிழக அரசால் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. சரி வாங்க சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அதாவது இலவசமாக வழங்கும் இந்த தையல் இயந்திரத்தை யாரெல்லாம் விண்ணப்பித்து பெறலாம், இதற்கு தேவைப்படும் சான்றிதழ்கள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்..!

Sathiyavani Muthu Ammaiyar Ninaivu Free Supply of Sewing Machine Scheme

Free Sewing Machine Scheme in Tamil

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:-

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழைப் பெண்கள் இவர்கள் அனைவரும் இந்த சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இருப்பினும் இந்த தையல் இயந்திரத்தை பெற மாத வருமானம் ரூ. 12,000-க்குள் இருக்க வேண்டும். இருப்பிடம், தையல் பயிற்சி, வயது, சாதிச் சான்றிதழ்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளி பெண் என்பதற்கான சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:-

1, வயதுச் சான்றிதழ்
2, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
3, வருமானச் சான்றிதழ்
4, ஆதார் அட்டை
5, அனுபவ சான்று
6, மொபைல் எண்
7, சொந்த கையொப்பம்
8, சாதி சான்றிதழ்
9, இருப்பிடச் சான்றிதழ்
10 உடல் ஊனமுற்றோர் சான்றிதழ்
11,கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது உதவி சான்றிதழ்

முக்கிய நிபந்தனைகள்:-

  • விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும், முகவரி தமிழ்நாட்டில் இருத்தல் வேண்டும்.
  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும் (இந்த சான்றிதழை உங்களது கிராம நிர்வாக அலுவலரிடம் நீங்கள் பெறலாம்) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மகளிர்சுய உதவிக் குழுக்களின் மூலம் பயிற்சி பெற்று பெறப்பட்ட சான்றிதழ்களையும் ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.

Free Sewing Machine Scheme in Tamil – பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூகநலத்துறைக்கு(உங்கள் மாவட்டத்தின் பெயர்) என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் அல்லது நேரில் சென்றோ கொடுக்கலாம்.

Free Sewing Machine Scheme in Tamil Application form

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Post Office Fixed Deposit Scheme in Tamil

2,00,000 செலுத்தினால் 2,90,659 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்..!

Atal pension Yojana scheme Tamil

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்- ₹10000 ரூபாய் பென்சன் கிடைக்கும்

5 வருடத்தில் 1,73,884/- வரை அளிக்கும் அட்டகாசமான திட்டம்..!

Modi Scheme in Tamil

நரேந்திர மோடி அறிவித்த திட்டங்கள் | Modi Scheme in Tamil

lic policy for child jeevan tarun in tamil

Lic-யில் குழந்தைகளின் பெயரில் Rs. 1900 செலுத்தினால் போதும் Rs. 12,15,000 பெறக்கூடிய அருமையான பாலிசி..!

20lakhs mudra scheme new update tamil

20 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம்.. யாரெல்லாம் பயன்பெறலாம்..

Pmsby Scheme Details in Tamil

20 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம்.. | Pmsby Scheme Details in Tamil

amma cement online registration

ஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..! how To Apply Amma Cement Online..!

PM Street Vendor Atmanirbhar Nidhi Scheme

7% வட்டி மானியத்துடன் மத்திய அரசின் கடனுதவி திட்டம்..! Atmanirbhar Nidhi Scheme..!