FRSB Interest Rate in Tamil
மனிதன் என்று பணத்தை உருவாக்கினானோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்டது. அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் உள்ள நிலையில் பணம் ஒருவரிடம் இல்லை என்றால் அவனை ஒரு மனிதனாக கூட இந்த சமுதாயம் மதிப்பது இல்லை. அதனால் அனைவருக்குமே தங்களின் தற்போதைய வாழ்க்கைக்காக மற்றும் எதிர்காலத்திற்க்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எந்த வகையான சேமிப்பு முறையை தேர்வு செய்வது என்பதில் தான் குழப்பம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் போஸ்ட் ஆபிஸின் FRSB திட்டம் பற்றிய முழுவிவரங்களை அறிந்து கொள்ளலாம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
FRSB Details in Tamil:

இந்த திட்டத்தை ரிசர்வ் வங்கி கடந்த 01.07.2020-ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டுவந்தது. இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி RBI Saving Bond என்ற பெயரில் Government of India வழங்கிவந்தன இருப்பினும் இந்த பாண்ட் 25/05/2020 அன்று நிறுத்தப்பட்டதாம். அதன் பிறகு தான் இந்த Floating Rate Saving Bond அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை இந்த RBI வங்கியின் சேமிப்பு பாத்திரத்தை முதலீடு செய்து வாங்கிவிட்டால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த திட்டத்திற்க்கான வட்டியை நீங்கள் பெறமுடியும்.
இவற்றில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை Government of India இந்த திட்டத்திற்க்கான வட்டிவிகிதத்தை மாற்றம் செய்வார்களாம். இதன் காரணமாகவே இந்த பாண்டை Floating Rate Saving Bond என்று அழைக்கின்றன.
இந்திய அரசு இந்த இந்த திட்டத்தை செயல்படுத்துவதால் இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும். அதனால் இந்த திட்டத்தின் கால அளவு முடிந்தப்பிற்கு நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்து இந்த பாண்டை வாங்குனீர்களோ, அந்த தொகையையும் நீங்கள் கேரண்டியுடன் திரும்ப பெறலாம்.
நீங்கள் இந்த பண்டை SBI உள்ளிட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் HDFC பேங்க், Axis பேங்க், ICICI பேங்க் மற்றும் IDBI வங்கிகளில் பெற்று கொள்ள முடியும்.
270 நாட்களில் 5,20,251 ரூபாய் வரை அளிக்கும் அசத்தலான திட்டம்
தகுதி:
இந்த திட்டத்தில் அனைத்து இந்திய குடிமக்களும் சேமிக்கலாம். மேலும் தனி நபராகவோ அல்லது கூட்டாகவோ இந்த சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
அதேபோல் மைனர் குழந்தையின் பெயரில் அவர்களுடைய பெற்றோர் அல்லது உரிமையாளர்கள் இந்த சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.
இந்திய குடிமகனாக இல்லாதவர்கள் இந்த பாண்டை வாங்க முடியாது.
முதலீடு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமா எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
இதில் ஒரு நிபந்தனை உள்ளது இதில் நீங்கள் நேரடியாக பணமாக கொடுத்து இந்த பாண்டை வாங்கினால் உங்களால் 20 ஆயிரம் ரூபாய் அளித்து மட்டுமே இந்த சேமிப்பு பத்திரத்தை வாங்க முடியும்.
இதுவே நீங்கள் Demand Draft, Cheque, Online Fund Transfer மூலம் இந்த பாண்டை வாங்கினால் இதற்கு எந்த வரம்பும் இல்லை.
தபால் துறையில் 5 வருடத்தில் 14 லட்சம் வரை அளிக்கும் சூப்பரான திட்டம்
பதவிக்காலம்:
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 7 ஆண்டுகள் ஆகும்.
வட்டிவிகிதம்:
இந்த சேமிப்பு பத்திரத்தின் தற்போதைய வட்டிவிகிதம் 7.15% ஆகும். இது ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும்.
திட்டத்தின் நிபந்தனைகள் மற்றும் நன்மைகள்:
இந்த பாண்டை ஒரு முறை வாங்கிய பிறகு திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்கு முன்பாகவே மூடவேண்டும் என்றால் அதற்கும் சில விதிமுறைகளும் இருக்கிறது அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.
60-70 வயதினர் இந்த பாண்டை முன்கூட்டியே மூட வேண்டும் என்றால் அவர்களுக்கு குறைந்தபட்ச Lock in Period-ஆக 6 ஆண்டுகள் செட் செய்துள்ளனர்.
70-80 வயதினர் இந்த பாண்டை முன்கூட்டியே மூட வேண்டும் என்றால் அவர்களுக்கு குறைந்தபட்ச Lock in Period-ஆக 5 ஆண்டுகள் செட் செய்துள்ளனர்.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த பாண்டை முன்கூட்டியே மூட வேண்டும் என்றால் அவர்களுக்கு குறைந்தபட்ச Lock in Period-ஆக 4 ஆண்டுகள் செட் செய்துள்ளனர்.
அதாவது இந்த Lock in Period-ஐ நீங்கள் நிறைவு செய்தப்பிறகு தான் இந்த பாண்டை குளோஸ் செய்துகொள்ளலாம்.
மேலும் இதில் நீங்கள் யாரை நாமினியாக தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ அவர்களை நீங்கள் இந்த திட்டத்தில் நாமினியாக தேர்வு செய்துகொள்ள முடியும்.
மாதம் ரூபாய் 1,000 முதலீடு செய்து 46,81,320 ரூபாய் வரை கிடைக்கும் அருமையான திட்டம்
வருமானம்:
| முதலீடு தொகை | வட்டி தொகை | 7 வருடத்துக்கான மொத்த வட்டி தொகை | மொத்த லாபம் |
| 1,00,000/- | 3,675/- | 51,450/- | 1,51,450/- |
| 2,00,000/- | 7,350/- | 1,02,900/- | 3,02,900/- |
| 3,00,000/- | 11,025/- | 1,54,350/- | 4,54,350/- |
| 5,00,000/- | 18,375/- | 2,57,250/- | 7,57,250/- |
| 10,00,000/- | 36,750/- | 5,14,500/- | 15,14,500/- |
இந்தியன் வங்கியில் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் 3,25,457 ரூபாய் வரை கிடைக்கும் திட்டம்
மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














