வீட்டில் சும்மா இருக்கும் நகைகளை வைத்து சூப்பரா சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா..?

Advertisement

Gold Monetisation Scheme in Tamil

இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவருமே தங்கத்தின் மீது அதிக ஆசை கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் எதிர்கால பயன்பாட்டிற்காக தங்கத்தை சேமித்து வைப்பதில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்கிறார்கள். எனவே அனைவரது வீட்டிலும் தங்கம் வாங்கி வைத்திருப்போம். அப்படி நாம் வீட்டில் வைத்திருக்கும் நகையை பாதுகாப்பாக வைக்கவும் அதே நேரத்தில் நகையை வைத்து பணமும் சம்பாதிக்க ஒரு அருமையான திட்டம் இருக்கிறது. அதனை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே இத்திட்டத்தின் மூலம் வீட்டில் பயனின்றி இருக்கும் தங்க நகையை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gold Monetization Scheme Details in Tamil:

செம்டம்பர் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2015 மற்றும் 2016 -ல் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தங்க பணமாக்குதல் திட்டங்களை (GMS) அறிமுகப்படுத்த ஒப்புதல் அளித்தது.

வீட்டில் பயனின்றி இருக்கும் சில நகைகளை தங்க பணமாக்குதல் திட்டத்தின் (GMS) கீழ் இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) டெபாசிட் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் தங்கத்தை இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யலாம். இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பு, வட்டி வருவாய் போன்ற பல நன்மைகளை பெறலாம்.

இத்திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கான தகுதிகள்:

குடியுரிமை உள்ள இந்தியர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், பரஸ்பர நிதிகள்/பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் உட்பட, அறக்கட்டளைகள் சபை (மியூச்சுவல் ஃபண்ட்) விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு, மாநில அரசு அல்லது மத்திய அரசு மாநில அரசிற்கு சொந்தமான வேறு எந்த நிறுவனமும் இத்திட்டத்தில் தங்கத்தை டெபாசிட் செய்ய தகுதியானவர்கள்.

மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!

குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் டெபாசிட் நகை அளவு:

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் தங்க நகை முதல் அதிகபட்சமாக எவ்வளவு நகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.

கால அளவு:

  • குறுகிய கால வைப்பு- 1 முதல் 3 ஆண்டுகள்
  • நடுத்தர கால அரசு வைப்பு- 5 முதல் 7 ஆண்டுகள்
  • நீண்டகால அரசு வைப்பு- 12 முதல் 14 ஆண்டுகள்

மேற்கண்ட கால அளவுகளில் இத்திட்டத்தில் தங்கத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.

வட்டி விகிதங்கள்:

கால அளவு  லாக் இன் காலம் மற்றும் வட்டி விகிதம் 
குறுகிய கால வங்கி வைப்பு (STBD) லாக் இன் காலம் மற்றும் வட்டி விகிதம் வங்கிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
நடுத்தர கால அரசாங்க வைப்பு (MTGD) லாக் இன் காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு 2.25% வட்டி வழங்கப்படுகிறது.
நீண்டகால அரசாங்க வைப்பு (LTGD) லாக் இன் காலம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு 2.50% வட்டி வழங்கப்படுகிறது.

 

50 பவுன் முதல் 100 பவுன் வரை சுலபமாக நகை சேர்க்க எளிமையான டிப்ஸ்..!

இத்திட்டத்தில் டெபாசிட் செய்வது எப்படி..?

தகுதியானவர்கள், KYC விதிமுறைகளை பூர்த்தி செய்த பிறகு, நியமிக்கப்பட்ட வங்கிகளில் தங்க வாய்ப்பு கணக்கை தொடங்கலாம். வாடிக்கையாளர்களின் தங்கத்தின் தூய்மையை டெஸ்ட் செய்ய GMCTA முறையில் மதிப்பீடு செய்வார்கள்.

 இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் தங்கமாகவோ அல்லது அதற்கு சமமான பணமாகவோ பெற்று கொள்ளலாம். இருப்பினும், தங்கத்தை மீட்டெடுக்கும் போது நிர்வாக கட்டணமாக 0.20% விதிக்கப்படலாம்.  

இத்திட்டத்தில் கிடைக்கும் வட்டிக்கு நமக்கு மூலதன ஆதாய வரி, செல்வ வரி மற்றும் வருமான வரி போன்றவை கிடையாது.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil

 

Advertisement