பாதுகாப்பான தங்கத்தை முதலீடு செய்யும் திட்டம்
அரசன் ஆனாலும் ஆண்டி ஆனாலும் தங்கத்தின் மீது ஆசைப்படாதவர் என்று எவரும் இல்லை. ஏனெனில் தங்கம் நமது அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கம் ஆகிவிட்டது. நமது செல்வ நிலையை உயர்த்திக்காட்டுவதற்கு மட்டுமின்றி நமது நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகுக்கிறது. எத்தனை வகை அணிகலன்கள் வந்தாலும் இந்தியரின் முதல் தேர்வாக இருப்பது தங்க அணிகலன்கள் தான். காலங்கள் மாறினாலும் தங்கத்தின் மீதான ஆர்வமும், மதிப்பு இன்றளவும் மாறவில்லை. இனி வரும் காலங்களிலும் மாறுமா என்பது சந்தேகம் தான்.
உலக அளவில் தங்கம் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்த 2023- ம் ஆண்டு தொடக்கத்தில் ரூபாய் 5200 இருந்த தங்கம் விலை, 2024 ல் ரூபாய் 6000 தொட்டிருக்கும். இந்த கால கட்டத்தில் உங்கள் செயலற்ற நகைகளை நீங்கள் ஒரு சிறந்த முறையில் முதலீடு செய்யலாம். உங்கள் செயலற்ற தங்கத்தின் இன்றைய மதிப்பை உயர்த்த இந்த பதிவை முழுமையாக படித்து பயன் பெறுங்கள். உங்கள் தங்க பாதுகாப்பிற்கு எங்களது வாழ்த்துக்கள்..
ஓய்வு காலத்தில் நிலையான வருமானம் பெற இதில் முதலீடு செய்யலாம்…
தங்கத்தை பணமாக்குதல் திட்டம்:
என்னடா இது தங்க பணமாக்கும் திட்டம்னு பார்க்கின்றீர்களா….
உங்களிடம் நகை இருந்தால் அதனை பத்திரமாக வங்கியில் வைத்து, அந்த தங்கத்தின் மதிப்பிற்கு வட்டியை நீங்கள் பெறலாம். இதனால் உங்கள் நகை பாதுகாப்பாகவும் அதே சமயம் உங்களுக்கு வருவாய் தரக்கூடியதாகவும் இருக்கும். தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
இந்திய அரசு 2015 இல் தங்கத்தை பணமாக்குதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி தங்கத்தை திரட்டவும், நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும் நோக்கங்களுக்காக பயன்படுத்தாத தங்கத்தை மையமாக வைத்து இந்தத் திட்டத்தைத் தொடங்கினார். மேலும், தற்போதுள்ள தங்க வைப்புத் திட்டம் (GDS) (1999) மற்றும் தங்க உலோகக் கடன் (GML) திட்டம் (1998) ஆகியவற்றுக்குப் பதிலாக (GMS) தங்கத்தை பணமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
மியூச்சுவல் ஃபண்டின் புதிய தங்க சேமிப்புத் திட்டம்..!
Gold Monetisation Scheme:
இந்த திட்டம் நாட்டில் செயலற்ற தங்கத்தை திரட்டி உற்பத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது தனிநபர் செயலற்ற தங்கம் வைத்திருப்பதில் வட்டி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்வதற்கான குறைந்தபட்ச அளவு 500 கிராம் ஆகும். உங்களின் டெபாசிட் காலம் 3, 4 அல்லது 5 வருடங்கள் வரை இருக்கலாம். மேலும், ஒருவர் தங்கத்தை தங்கக் கட்டிகள், நாணயங்கள் அல்லது நகைகள் வடிவில் ஸ்கிராப் வடிவத்தில் டெபாசிட் செய்யலாம்.
தங்கம் விலை இப்படி ஏறிக்கிட்டே போனா எல்லாரும் கழுத்தில கவரின் தான்போட்டுக்கமுடியும்
பதவிக்காலம் : ஒருவர் தங்க பணமாக்குதல் திட்டத்தில் 1 முதல் 15 ஆண்டுகளில் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம் : முதலீட்டின் காலத்தைப் பொறுத்து வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். செயலற்ற தங்கத்தை முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் 2.50% வரை சம்பாதிக்கலாம்.
குறைந்தபட்ச வைப்புத்தொகை: இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவருக்கு தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை 30 கிராம் 24k தங்கத்தை இதில் வைக்கலாம். அந்த தங்கம், தங்கம் நாணயங்கள், நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் போன்ற பல்வேறு வடிவங்களில் இருக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை.
முதிர்வு கட்டணம் : GMS இல் பெறப்படும் வட்டியானது கிராம் அல்லது ரூபாயில் உங்கள் கணக்கில் செலுத்தப்படும். குறுகிய கால முதலீட்டுக்கு, வட்டி மற்றும் அசல் தங்கம் அல்லது இந்திய ரூபாய் மதிப்பில் செலுத்தப்படும். நடுத்தர மற்றும் நீண்ட கால முதலீட்டுக்கு, வட்டி மற்றும் அசல் ஆகியவை பணமாக உங்கள் கணக்குகளில் செலுத்தப்படும்.
கடன் வசதி : உங்கள் முதலீட்டு காலத்தில் உங்களுக்கு ஏதேனும் நிதித் தேவை ஏற்பட்டால் ஒருவர் தங்களுடைய தங்கத் திட்டத்திற்கு எதிராக கடனைப் பெறலாம். தங்கத்திற்கு சமமான மதிப்பில் 70-75% வரை கடன் தொகையை கடனாக நீங்கள் பேரை தகுதியுடையவர்கள்
இந்தியன் வங்கியில் யாரெல்லாம் தங்க நகைக்கடன் பெற முடியும்.?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |