காய்கறி மலர் பழ பயிர்கள் சாகுபடிக்கு அரசு தோட்டக்கலை துறை வழங்கும் 40% மானியம்..!

Government Subsidy for Crops in Tamil

தமிழகத்தில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிப்பதற்காக, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் வழங்கப்படும் மானியத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம் எனத் தமிழ்நாடு வேளாண்மை – உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட பலவகையான தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு நிறைய மானியங்களை வழங்குகிறது. அந்த வகையில் காய்கறிகளுக்கு எவ்வளவும் மானியம், மலர்களுக்கு எவ்வளவு மானியம், பழங்களுக்கு எவ்வளவு மானியம் என்று இப்பொழுது நாம் இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

எவ்வளவு மானியம் வழங்கப்படும்?

இந்த திட்டத்தில் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு ஆகும் மொத்த செலவில், அரசு 40% மானியம் வழங்குகிறது. பயிர் வாரியாக எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

காய்கறிகள் சாகுபடிக்கு மானியம்:காய்கறிகள்

தக்காளி, மிளகாய், கத்திரி போன்ற காய்கறி பயிர்களின் சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.50,000 செலவாகும். இதில், ரூ.20,000/- மதிப்புள்ள குழித்தட்டு நாற்றுக்களும், சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களும் மானியமாக வழங்கப்படுகின்றன. ஆக அதிகபட்சமாக  இந்த திட்டத்தில் ஒரு விவசாயிக்கு 2 எக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
மலிவான விலையில் LED பல்புகளை வழங்கும் உஜாலா திட்டம்..!

பழங்கள் சாகுபடிக்கு மானியம்:பழங்கள்

அடர் நடவு முறையில் மா சாகுபடியை அதிகரிப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.9,800/- மானியத்தில் ஒட்டு மாஞ்செடிகளும், கொய்யா சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.17,600/- மானியத்தில் கொய்யா பதியன்களும், இடுபொருள்களும்.

திசு வளர்ப்பு முறையில் வாழை சாகுபடி மேற்கொள்ள, ஹெக்டருக்கு ரூ.37,500/- மானியத்தில் திசு வாழைக் கன்றுகளும், இடுபொருள்களும்.

பப்பாளி சாகுபடியை அதிகரிக்க, ஹெக்டருக்கு ரூ.23,100/- மானியத்தில் பப்பாளிக் கன்றுகளும், இடுபொருள்களும்.

எலுமிச்சை சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.13,200/- மானியத்தில் எலுமிச்சைக் கன்றுகளும், இடுபொருள்களும்.

அத்தி சாகுபடியை அதிகரிப்பதற்கு ஹெக்டருக்கு ரூ.20,300/- மானியத்தில் அத்தி நாற்றுக்களும், இடுபொருள்களும்,

வெண்ணைய் பழம், நெல்லி, பலா சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.14,400/- மானியத்தில் நடவுச் செடிகளும், இடுபொருள்களும் வழங்கப்படும்.

மேலும் டிராகன் பழ சாகுபடிக்கு பந்தல் அமைக்கவும், நடவுப்பொருள்கள் மற்றும் இடுபொருள்களுக்காகவும் ஹெக்டருக்கு ரூ.96,000/-ம், அன்னாசி சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.26,300/-ம், ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.1,12,000/-ம் நடவுக்குப் பின், கள ஆய்வு மேற்கொண்டு, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். பழப் பயிர்களைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு நான்கு ஹெக்டர் வரை மானியம் வழங்கப்படும்.

மலர் சாகுபடிக்கு:மலர்கள்

உதிரி மலர்கள் சாகுபடி செய்ய ரூ.16,000/- மதிப்பிலான மலர் செடிகளும், கிழங்கு வகை மலர்களில், நடவுக்குப் பின் வயல்களை கள ஆய்வு செய்து பின்னேற்பு மானியமாக ஹெக்டருக்கு ரூ.60,000/-ம், கொய்மலர்கள் சாகுபடிக்கு ஹெக்டருக்கு ரூ.40,000/-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

கோக்கோ, முந்திரி சாகுபடிக்கான மானியம்:

கோக்கோ, முந்திரி சாகுபடி செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.12,000/- மானியத்தில் நடவுப்பொருள்களும், இடுபொருள்களும் விநியோகம் செய்யப்படும்.

யாரெல்லாம் மானியம் பெற தகுதியானவர்கள்:

சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டுக் காலத்துக்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
வேளாண் கருவிகளை வாங்க 50 % மானியம் என்று வேளாண்துறை அறிவிப்பு

முன்னுரிமை:

கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள்

எப்படி பதிவு செய்யலாம்?

தேசிய தோட்டக்கலைத் திட்டத்தில் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை tnhorticulture.tn.gov.in க்ளிக் செய்து இந்த இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil