Pradhan Mantri Suraksha Bima Yojana in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. வெறும் இருப்பது ரூபாய் செலுத்தி இரண்டு லட்சம் ரூபாய் வரை பெறக்கூடிய ஒரு ஸ்கீமை பற்றி தான் நாம் இன்றிய பதிவில் பார்க்க போகிறோம். இது ஒரு கவர்மண்ட் ஸ்கீம் ஆகும். குறிப்பாக இது ஒரு மத்திய அரசின் திட்டம் ஆகும். சரி வாங்க இது என்ன திட்டம். யாரெல்லாம் பயன்பெறலாம். எப்படி இந்த திட்டத்தில் இணைவது போன்ற முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
PMSBY Scheme in Tamil:
குறைந்த பிரீமியத்தில் Accident insurance policy-ஐ பொதுமக்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த ஸ்கீம் தான் இந்த PMSBY ஸ்கீம் ஆகும். இந்த ஸ்கீமின் முழு விரிவாக்கம் pradhan mantri suraksha bima yojana.
இந்த ஸ்கீமில் ஒரு வருடத்திற்கு வெறும் 20 ரூபாய் செலுத்தி Accidental Insurence policy-ஐ எடுக்கலாம். மேலும் இந்த பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (PMSBY) ஸ்கீமில் எங்கெல்லாம் இணையலாம் என்றால் உங்கள் ஊரில் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சேரலாம்.
இத்திட்டத்தில் இணைய கண்டிப்பாக உங்களிடம் ஒரு Saving Account இருக்க வேண்டும். ஏன் என்றால் இந்த ஸ்கீமினுடைய இயர்லி பிரீமியம் 20 ரூபாய் உங்கள் Saving Account-யில் இருந்து ஆட்டோ டெபிட் முறையில் கட் செய்துகொள்வார்கள். ஆக இந்த அக்கவுண்டை திறப்பதற்கு உங்களிடம் ஒரு சேவிங் அக்கௌன்ட் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் உங்கள் சேவிங் அக்கவுண்டில் இருந்து 20 ரூபாய் ஆட்டோ டெபிட் முறையில் கட் செய்யப்படுவதினால், ஒவ்வொரு வருடமும் இந்த அக்கௌன்ட் ரினீவல் செய்யப்படுகிறது.
பாலிசிதாரர் விபத்து மூலமாக இறந்தார்கள் என்றால் அவர்களுடைய நாமினிக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் Rs.7.13 லட்சம் தரும் அஞ்சலக மாத சேமிப்பு திட்டம்
இந்த பாலிசியை வாங்குவதற்க்கான வயது தகுதி என்னவென்றால் பாலிசிதாரரின் குறைந்தபட்ச வயது 18 வயதுமுதக் அதிகபட்ச 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு முறை இந்த பாலிசியை உங்கள் பெயரில் வாங்கினால் ஒவ்வொரு வருடமும் உங்கள் சேவின் அக்கவுண்டில் இருந்து 20 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.
ஒரு நபர் ஒரேயொரு பாலிசியை மட்டும் தான் இந்த திட்டத்தில் எடுக்கமுடியும். மேலும் இந்த பாலிசியின் Covering Period ஜூன் 1 முதல் மே 31 வரை நிர்ணகித்துள்ளனர். ஆக ஒவ்வொரு மாதமும் உங்கள் சேவிங் அக்கவுண்டில் இருந்து 20 ரூபாயை மே மாதம் கட் செய்துகொள்வார்கள்.
இந்த பாலிசியின் Wating Period என்பது இல்லை. அதாவது இன்று இந்த பாலிசியை வாங்குபவர்களுக்கு நாளை ஏதாவது ஆக்கும்பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு 2 லட்சம் வழங்கபடுகிறது.
Death & Disability Benefits:
பாலிசிதாரருக்கு விபத்தினால் இறக்கும் பட்சத்தில் அவர்களுடைய நாமினிக்கு 2 லட்சம் வழங்கட்டும்.
Disability Benefits:
விபத்து மூலமாக இரண்டு கண்கள்/ இரண்டு கைகள்/ இரண்டு கைகள் இழந்தாலோ 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல் விபத்தினால் ஒரு கண்/ ஒரு கை/ ஒரு கால் இழந்தாலோ ஒரு லட்சம் ரூபாய் வழங்கபடுகிறது.
எந்தந்த விபத்துகள் இந்த திட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது?
வாகனங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசியில் 2,00,000 வரை க்ளைம் செய்துகொள்ளலாம்.
இயற்கை சுழற்சியால் ஏற்படும் விபத்து அதாவது மழை வெள்ளம், பூகம்பம் இது போன்று இயற்கை சுழற்சியால் ஏற்படும் விபத்துகளுக்கு 2,00,000 ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
பாம்பு கடிச்சி இறந்தால், மடியில் இருந்து கீழே விழுந்தால் இது போன்று மற்ற விபத்துகள் மூலமாக இருந்தாலும் இரண்டு லட்சம் வரை பணம் கிளைம் செய்துகிள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் Rs.50/- சேமித்து ரூ.18.5 லட்சம் வரை பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!
இந்த பாலிசியை யாரெல்லாம் வங்கம்?
இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த பாலிசியை வாங்கலாம். இந்திய குடிமக்கள் மட்டும் இல்லாமல் NRI-ம் இந்த இன்சூரன்ஸை வாங்கலாம்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |