1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..!

Advertisement

1800 சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அஞ்சலகத்தில் அசத்தலான திட்டம்..! Gram Santosh Full Details in Post Office Tamil..!

Gram Santosh Full Details in Post Office Tamil – நண்பர்களுக்கு வணக்கம் இன்று நாம் Rural Postal Life Insurance பாலிசியான Gram Santosh Policy பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gram Santosh Full Details in Post Office Tamil:

Rural Postal Life Insurance பாலிசியில் உள்ள Gram Santosh Policy ஒரு Investment Cum Life Insurance Policy ஆகும்.

இந்த பாலிசிக்கான மாத பிரீமியம் தொகை பொறுத்தவரை உங்கள் வயது மற்றும் நீங்கள் தேர்வு செய்யும் காப்பீட்டு தொகையை பொறுத்து மாறுபடும்.

இந்த பாலிசி திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் போனஸ் வழங்குவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் 3,15,568 பெறும் அரசு திட்டம்..!

வயது:

இந்த பாலிசியில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 19 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 55 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை வாங்கலாம்.

பாலிசியின் கால அளவு:

பாலிசியின் கால அளவு பொறுத்தவரை 5 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் ஆகும்.

காப்பீட்டு தொகை:

இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 10,000/- ஆகும். அதிகபட்ச காப்பீட்டு தொகை 10 லட்சம் ஆகும் ஆகும்.

போனஸ்:

இந்த பாலிசியில் நீங்கள் Sum Assured தொகையாக எவ்வளவு தொகையை தேர்வு செயகிண்றீர்களோ அந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 48 ரூபாய் ஒவ்வொரு வருடமும் வாங்குவார்கள்.

உதாரணத்திற்கு 1,00,000 ரூபாய் பாலிசியை வாங்கி இருந்தால் ஒவ்வொரு வருடமும் 4800 ரூபாய் போனஸ் வழங்குவார்கள்.

Maturity Benefits:

இந்த பாலிசியை பொறுத்தவரை பாலிசியின் காலம் முடிந்த பிறகு நீங்கள் தேர்வு செய்த Sum Assured தொகை மற்றும் அதற்கான போனஸ் ஆகிய இரண்டியும் சேர்த்து வழங்குவார்கள்.

எதிர்பாராத விதமாக பாலிசி ஹோல்டர் இறந்துவிட்டால் அவர்களுடைய நாமினிக்கு பாலிசி ஹோல்டர் தேர்வு செய்த Sum Assured தொகை மற்றும் பாலிசி ஹோல்டர் எந்த தேதியில் இறந்தார்களோ அந்த தேதி வரை மட்டும் போனஸ் வழங்கப்படும்.

மேலும் இந்த திட்டத்தில் Loan Facility வழங்கப்டுகிறது. இருப்பினும் இந்த வசதியை நீங்கள் பாலிசியில் இணைந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தான் பயன்படுத்த முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

உதாரணம்:

5 லட்சம் ரூபாய் Sum Assured-யில் இந்த பாலிசியை உங்களது 19 வயதில் 21 வருட கால அளவில் வாங்கி இருந்தால். உங்களுக்கான மாத பிரீமியம் 1875/- ரூபாய் ஆகும்.

ஆக ஒவ்வொரு மாதமும் 1875 ரூபாய் பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும். 21 ஆண்டில் நீங்கள் மொத்த பிரீமியம் தொகையாக 4,72,500/- ரூபாய் செலுத்துவீர்கள்.

நீங்கள் தேர்வு செய்த 5 லட்சம் Sum Assured தொகைக்கு உங்களுக்கு போனசாக வருடா வருடன்  24000 ரூபாய் வழங்குவார்கள்.

பாலிசியின் மொத்த கால அளவான 21 வருடத்தில் உங்களுக்கு 5,04,000/- ரூபாயை போனசாக வழங்குவார்கள்.

21 வருடத்தில் மொத்த போனஸ் தொகையாக 5,04,000 இந்த பாலிசியில் வழங்குவார்கள். 21 வருடத்திற்கு பிறகு உங்களுக்கு வழங்கப்படும் Sum Assured தொகையான 5 லட்சம் அதற்கான போனஸ் தொகை 5,04,000/- ரூபாய் ஆக இவை இரண்டயும் சேர்த்து உங்களுக்கு 10,04,000/- ரூபாய் வழங்குவார்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement