தினமும் 79 ரூபாய் சேமித்து 9,50,000 லட்சம் பெறும் அரசு திட்டம்..!

Advertisement

Gram Sumangal Scheme in Tamil

நண்பர்களே வணக்கம்..! அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக நாம் சம்பாதிப்பது நம்முடைய தேவைக்காக தான். அப்படி நம் தேவைக்காக பயன்படுத்தும் போது இந்த பணம் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நல்லது தான். அதேபோல் அதற்கு இடையில் அந்த பணத்தை வைத்து நல்ல வட்டியாக கிடைத்தால் நன்றாக இருக்கும்..! சரி உங்களுக்கு ஒரு கேள்வி உள்ளது அது என்ன தெரியுமா..? நீங்கள் தினமும் 79 ரூபாய் சேமித்து அதன் மூலம் வட்டி கிடைத்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும். அது மாதிரியான திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Gram Sumangal Scheme in Tamil:

இந்த திட்டம் ஒரு Money pack பாலிசி ஆகும். அதேபோல் இது Investment மற்றும்  Life insurance policy ஆகும்.

இந்த பாலிசியில் சேர்வதன் மூலம் நல்ல சேமிப்பு தொகையை பெற முடியும்.

இந்த  திட்டத்தை  இரண்டு விதமான கால அளவில் வழங்குகிறார்கள். 15 வருடம் மற்றும் 20 வருடம் ஆகும்.

என்ன தகுதிகள் தேவை:

இதில் நீங்கள் 15 வருடத்தை தேர்வு செய்தீர்கள் என்றால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.

அதேபோல் 20 வருட பாலிசியை வாங்கினால் குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.

எவ்வளவு முதலீடு தொகை:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 முதல் அதிகபட்சமாக 10,00,000 வரை சேரலாம்.

இதற்கு Bonus rate இந்த திட்டத்தில் சேர்ந்தால் நீங்கள் எவ்வளவு தொகையில் சேர்ந்து இருக்கீர்களோ அந்த திட்டத்தில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ஒவ்வொரு வருடமும் 45 ரூபாய் போனஸ் ரேட்டாக வழங்குகிறார்கள்.

உதாரணமாக 10,000 ரூபாய் பாலிசியில் சேர்ந்தீர்கள் என்றால், இதற்கு போனஸ் ரேட்டாக 450 ரூபாய் ஒவ்வொரு வருடமும் வழங்குகிறார்கள்.

Money pack நன்மைகள்:

உதாரணத்திற்கு 15 வருடம் சேர்ந்தீர்கள் என்றால், நீங்கள் பாலிசியின் 6 வருடத்தில், 9 வருடம், 12 வருடத்தில் உங்கள் தொகையில் 20 சதவீத தொகையை Money pack  -காக வழங்குவார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் எந்த விதமான லோன் வாங்க முடியாது. இதில் பாலிசியின் இடையில் நிறுத்த முடியாது.

இதில் உங்கள் தொகையில் மாதம், 6 மாதம், 9 மாதம், 1 வருடத்தில் என இதுபோன்ற காலங்களில் உங்கள் தொகையை செலுத்தலாம்.

 5 வருடத்தில் Rs.7,70,000/- பெறும் அதிரடியான திட்டம்

எடுத்துக்காட்டு:

இந்த பாலிசியை 19 வயதில் 20 வருட கால அளவில் 50,00,000 சேர்ந்தால், அவர்கள் இந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு தொகையை பெற முடியும் என்று பார்க்கலாம் வாங்க..!

அவர்கள் மாதம் மாதம் 2,475 ரூபாய் செலுத்த வேண்டும். அதேபோல் 20 வருடத்தில் 5,94,000 ரூபாய் செலுத்துவார்கள்.

இதற்கான போனஸ் ரேட்டாக 22,500 ரூபாய் பெறுவார்கள். அதேபோல் வருட இறுதியில் 4,50,000 ரூபாய் கிடைக்கும்.

Money Pack -காக 6 வருடம், 12 வருடம், 16 வருடம் பாலிசியின் 20 சதவீதம் தொகையான 1 லட்சம் ரூபாய் பெறுவார்கள். 

மொத்தமாக இந்த திட்டத்தின் மூலம் 6,50,000 ரூபாய் பெறுவார்கள். இதில் கிடைத்த Money pack தொகையையும் சேர்த்தீர்கள் என்றால் 9,50,000 ரூபாய் வரை கிடைக்கும்.

ஏப்ரல் முதல், மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் பெறும் பெண்களுக்கான சிறப்பு திட்டம்

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement