தினமும் 50 ரூபாய் சேமித்தால் Rs.35,00,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

தினமும் 50 ரூபாய் சேமித்தால் Rs.35,00,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..! Gram Suraksha Policy in Tamil..!

Gram Suraksha Policy in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் 50 ரூபாய் சேமித்தால் 35 லட்சம் பெறக்கூடிய ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்துகொள்ள போகிறோம். போஸ்ட் ஆபீசில் சேமிப்பு திட்டங்கள் மட்டும் இல்லாமல் லைப் இன்சூரன்ஸ் பாலிசிகளையும் வழங்குகின்றன. அந்த வகையில் இன்று நாம் Whole Life Assurance Policy திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு முதலீடு செய்யலாம், எப்படி இந்த திட்டத்தில் இணைவது மற்றும் இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் போன்ற அனைத்து தகவல்களையும் இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Whole Life Assurance Policy:

இந்த பாலிசியில் கிராம புறங்களிலில் உள்ள அனைவருமே பயன்பெறலாம்.

இந்த பாலிசியில் நீங்கள் தினமும் 50 ரூபாய் என்று ஒவ்வொரு மாதமும் 1400 ரூபாய் செலுத்தினால் இந்த ஸ்கீமினுடைய கால அளவு முடிந்தபிறகு 35 லட்சம் ரூபாயை நீங்கள் பெற முடியும்

தகுதி விவரங்கள்:Gram Suraksha Policy

இந்த Whole Life Assurance Policy-யான Gram Suraksha Policy ஒரு Rural postal Life Insurance Policy ஆகும்.

கிராம புறங்களிலில் உள்ள அனைவருமே இந்த பாலிசியில் இணையலாம்.

இந்த பாலிசியை வாங்க நினைப்பவர்கள் உங்களது 19 வயதில் இருந்து 55 வயதிற்குள் இணையலாம். 19 வயதிற்கும் குறைவான நபர்களோ அல்லது 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பாலிசியை வாங்க முடியாது.

இந்த பாலிசியின் கால அளவானது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 41 ஆண்டுகள் ஆகும்.

பாலிசியினுடைய காப்பீட்டு தொகையாக குறைந்தபட்சம் 10,000/- ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை நிர்ணகித்துள்ளனர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 79 ரூபாய் சேமித்து 9,50,000 லட்சம் பெறும் அரசு திட்டம்..!

Bonus Rate:

பொதுவாக postal life insurance-யில் Bonus Rate வழங்குவார்கள். இந்த Bonus Rate எப்படி வழங்குவார்கள் என்றால் நாம் Sum Assured (காப்பீடு தொகை) தொகையாக எவ்வளவு தேர்வு செய்கிறோமோ அந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொவொரு வருடமும் Bonus Rate-ஆக வழங்குவார்கள். அந்த வகையில் இந்த Gram Suraksha Policy-யில் நீங்கள் எவ்வளவு Sum Assured தொகையை தேர்வு செய்துள்ளீர்களோ அந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் Bonus Rate வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு பாலிசியை வாங்கிருந்தால் வருடத்திற்கு ஒரு முறை 6000 ரூபாய் Bonus Rate வழங்குவார்கள்.

பிரீமியம் தொகை – Gram Suraksha Policy in Tamil:

இந்த பாலிசியில் உங்களுக்கான பிரீமியம் தொகை என்பது உங்களுடைய வயது, Sum Assured தொகையாக எவ்வளவு தொகையை தேர்வு செய்தீர்களோ அந்த தொகை மற்றும் மேலும் பாலிசியினுடைய கால அளவாக எவ்வளவு காலம் தேர்வு செய்தீர்களோ ஆகிய மூன்றையும் பொறுத்து தான் உங்களுக்கான பிரீமியம் தொகை வழங்கப்படும்.

மேலும் இந்த பாலிசியை பாலிசியினுடைய இடைப்பட்ட காலத்தில் Endowments Gram Santosh policy-யாக மாற்றிக்கொள்ளலாம். அது எதனால் என்றால் இந்த Whole Life Assurance Policy-யான Gram Suraksha Policy-யின் மெச்சூரிட்டி தொகையை உங்களுடைய 80 வயதில் தான் பெற முடியும். என்பது வயது என்பது அதிகமான கால அளவு என்பதால் நீங்கள் இந்த பாலிசியின் இடைப்பட்ட காலத்தில் Endowments Gram Santosh policy-யாக மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு நீங்கள் எந்த தேதியில் மற்றம் செய்கின்றிர்களோ அதன்பிறகு உங்கள் காப்பீட்டு தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் Gram Santosh policy-யில் எவ்வளவு Bonus Rate வழங்குகிறார்களோ அந்த Bonus Rate-ஐ  தான் வழங்குவார்கள் ஆக Gram Santosh policy-யில் Bonus Rate-க காப்பீட்டு தொகையின் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் 48 ரூபாய் வழங்குகின்றன.

எவ்வளவு செலுத்தினால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

உங்களுடைய 19-வது வயதில் 10 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகையில் 41 வருட கால அளவில் இந்த பாலிசியை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

உங்களுக்கான மாத பிரீமியம் 1400 ரூபாய் ஆகும். ஆக ஒரு நாளுக்கு நீங்கள் 50 ரூபாயை சேமித்தாகவேண்டும்.

ஆக 41 வருடம் நீங்கள் மாதம் மாதம் 1400 ரூபாய் செலுத்தினால் மொத்தமாக நீங்கள் பிரீமியம் தொகையாக 6,88,800/- ரூபாய் செலுத்த வேண்டி இருக்கும். அதற்கான போனஸ் தொகை ஒவ்வொரு வருடத்திற்கும் 72,000/- ரூபாய் வழங்கப்படும். மொத்த போனஸ் தொகை என்று பார்த்தால் 24,60,000/- வழங்குவார்கள்.

இருப்பினும் உங்களுடைய மெச்சூரிட்டி தொகையை உங்களுடைய 80 வயதில் தான் தருவார்கள் ஆக மொத்த மெச்சூரிட்டி தொகையாக 34,60,000/- வழங்குவார்கள்.

ஒருவேளை பாலிசி வாங்கியவர்கள் 80 வயதிற்குலேயே இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களுடைய நாமினிக்கு பாலிசிதாரர் தேர்வு செய்திருந்த 10 லட்சம் காப்பீட்டு தொகை மற்றும் எந்த தேதியில் அந்த பாலிசிதாரர் இறந்தார்களோ அந்த தேதி வரையிலான Bonus Rate-ஐ வழங்குவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 மாதத்திற்கு ஒரு முறை 61,500 ரூபாய் வருமானம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸின் அசத்தலான சேமிப்பு திட்டம்…!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement