50 ரூபாய் சேமித்தால் Rs.35 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

Gram Suraksha Scheme full Details and Benefits Tamil

50 ரூபாய் சேமித்தால் Rs.35,00,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..! Gram Suraksha Scheme full Details and Benefits Tamil..!

ஒவ்வொரு நாளும் 50 ரூபாய் விகிதம் ஒரு மாதத்திற்கு 1400 ரூபாய் விகிதம் நீங்கள் சேமித்து வந்தால் 35 லட்சம் தரக்கூடிய ஒரு சேமிப்பு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் படித்தறியப்போகிறோம். ஆக முழுமையான தகவல்களை பெற இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Gram Suraksha Scheme full Details and Benefits Tamil:

போஸ்ட் ஆபீசில் சேமிப்பு திட்டம் மட்டும் இல்லாமல் லைப் இன்சூரன்ஸ் யாவரையும் பொது மக்களுக்கு வழங்குகின்றன. அவற்றில் ஒன்று தான் Gram Suraksha Policy.

இந்த பாலிசியில் கிராமப்புறங்களில் உள்ள எல்லா நபர்களும் அஞ்சல் அலுவலகத்தில் ஜோன் செய்யலாம்.

இந்த பாலிசியில் இணைந்து ஒவ்வொரு நாளும் 50 ரூபாய் விகிதம் ஒரு மாதத்திற்கு 1400 ரூபாய் டெபாசிட் செய்தால் இந்த ஸ்கீமினுடைய கால அளவு முடியும் போது 35 லட்சம் ரூபாயை நீங்கள் திரும்ப பெறலாம்.

Gram Suraksha Policy என்பது ஒரு Rural Postal Life Insurance Policy.

இந்த ஸ்கீமை வாங்க விரும்புபவர்களின் வயது 19 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இந்த ஸ்கீமிற்கான கால அளவு 5 ஆண்டுகள் முதல் 41 ஆண்டுகள் வரை உள்ளது.

பாலிசியின் Sum Assured தொகையாக குறைந்தபட்சம் 10000 ரூபாய் செட் செய்துள்ளனர் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை உள்ளது.

இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்கீமில் போனஸும் வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் தேர்வு செய்த Sum Assured தொகையை பொறுத்து போனஸ் வழங்கப்படுகிறது. அதாவது நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு Sum Assured தொகையை தேர்வு செய்திருந்தால். இந்த தொகையில் உள்ள ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 60 ரூபாய் போனஸ் வழங்குவார்கள். அந்த வாகையில் 1 லட்சம் ரூபாய்க்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் போனஸ் வழங்கப்படும்.

போஸ்ட் ஆஃபீஸ் லைப் இன்சூரன்ஸ் பாலிசியில் இணைத்த மூன்று வருடங்களுக்கு பிறகு உங்களுக்கு Loan Facility வழங்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூ.436 செலுத்தினால் 2 லட்சம் பெறலாம்..! மத்திய அரசு திட்டம் அனைவரும் சேரலாம்..!

எவ்வளவு காலம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்:

  1. உங்களுடைய 19-வது வயதில் 10 லட்சம் Sum Assured தொகையில் 41 ஆண்டு கால அளவில் இந்த பாலிசியை வாங்கினால்.
  2. உங்களுக்கான மாத பிரீமியம் 1400 ரூபாய், உங்களுடைய 41 வருட பிரிமியம் தொகை 6,88,800/-
  3. உங்களுக்கு வழங்கப்படும் வருடாந்திர போனஸ் தொகை 72,000/-
  4. மொத்த போனஸ் தொகை 24,60,000/- ஆகும்.
  5. உங்களுடைய மெச்சுரிட்டி தொகை 34,60,000/- ரூபாய் ஆகும்.
  6. இந்த மெச்சுரிட்டி தொகையை உங்களுடைய 80 வயதில் தான் பெற முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அதிக வட்டி தரும் திட்டங்களில் எது சிறந்தது..? வாங்க தெரிந்து கொள்வோம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil