இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.1400 சேமித்தால் கையில் கிடைப்பது ரூ.35 லட்சம்!

Advertisement

கிராம சுரக்ஷா திட்டம்..! Gram Suraksha Scheme in Tamil..!

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் அஞ்சலக காப்பீட்டு திட்டங்களில் ஒன்றான கிராம சுரக்ஷா திட்டத்தை பற்றிய முழுமையான விவரங்களை தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதாவது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம்.. இதற்கான வயது வரம்பு எவ்வளவு.. இந்த காப்பீட்டு திட்டத்தில் நாம் எவ்வளவு முதலீடு செய்யலாம்.. நாம் முதலீடு செய்த தொகைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். எப்படி இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைவது போன்ற முமையான விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

கிராம சுரக்ஷா திட்டம் – Gram Suraksha Scheme in Tamil:

இந்தியாவை பொறுத்தவரை சிறந்த சிறு சேமிப்பு திட்டங்களில் அதிகம் இடம் பெற்றிருப்பது அஞ்சல் சேமிப்பு திட்டம் தான். இதற்கு என்ன காரணம் என்றால் இது அரசின் ஆதரவால் செயல்படும் ஒரு அமைப்பாகவும் இருந்து வருகின்றது. இதன் காரணமாக நம்பிக்கையானதாகவும், பாதுகாப்பானதாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றிற்கு மேலாக அஞ்சலக திட்டங்களில் சந்தை அபாயம் என்பது இல்லை. நிலையான வருமானம் தரும் திட்டங்களாகவும் உள்ளது. குறிப்பாக இவற்றில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மட்டும் இல்லாமல்.. இவற்றில் இன்சூரன் திட்டங்களும் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் நாம் இப்பொழுது தெரிந்து கொள்ள இருப்பது கிராம சுரக்ஷா காப்பீட்டு திட்டத்தை பற்றி தான்.

கிராம சுரக்ஷா காப்பீட்டு திட்டம் என்பது அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அரசு ஊழியர்கள், நகர்ப்புற, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு வகையான காப்பீட்டு திட்டங்கள் உள்ளன அவை ஒன்று, அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PLI). இரண்டாவது, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (RPLI).

எப்படி இன்சூரன் எடுக்கலாம்?

Gram Suraksha Scheme in Tamil – முதல் காப்பீட்டு திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவியுடன் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் ஊழியர்கள், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இணையலாம்

இரண்டாவது திட்டத்தில் கிராமப் பகுதிகளில் வசிக்கும் அனைவரும் இந்த பாலிசியினை பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.

வயது வரம்பு:

இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை10 லட்சம் ரூபாய் ஆகும்.

பிரீமியம் எவ்வளவு செலுத்த வேண்டும்?

Gram Suraksha Scheme in Tamil – இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாகும். ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும். இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும். அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.

முதிர்வு எவ்வளவு கிடைக்கும்?

  • இந்த திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
  • இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.
  • இதே 60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
    சிறப்பம்சங்கள்.

பிரீமியம் தொகையை எப்படியெல்லாம் செலுத்தலாம் தெரியும்?

இந்த காப்பீட்டு திட்டத்தில் மாத வாரியாக, காலாண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, ஆண்டு வாரியாக என உங்கள் விருப்ப அடிப்படையில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளலாம்.

நாமினி வசதியும் உண்டு:

இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஒரு வாடிக்கையாளர் தங்கள் மின்னஞ்சல் ஐடி அல்லது மொபைல் எண்ணைப் புதுப்பிக்க விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இந்த காப்பீட்டு திட்டம் பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகவும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

மேலும் இது போன்ற சேமிப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉👉👉 Schemes
Advertisement