Hdfc Bank FD Scheme
பொதுவாக வங்கிகள், போஸ்ட் ஆபீஸ் மற்றும் நிதிநிறுவனம் என அனைத்திலும் பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அதே அந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் அதற்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் என்னென்ன என்பது சரியாக தெரியாமல் இருக்கும். அதற்கு முதலில் அத்தகைய திட்டத்தை பற்றி தெரிந்துக்கொள்வது தான் நல்லது. அதனால் இன்று Hdfc வங்கியில் உள்ள பிக்சட் டெபாசிட் திட்டம் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹெச்டிஎப்சி பேங்க் பிக்சட் டெபாசிட் திட்டம்:

ஹெச்டிஎப்சி வங்கியில் உள்ள இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் சேரலாம். மேலும் இதில் டெபாசிட் தொகை என்பது உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைந்து இருக்கிறது.
முதலீடு தொகை:
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு குறைந்தபட்ச தொகையாக 5,000 ரூபாய் முதல் அதிகப்பட்ச தொகையாக 2 கோடி வரையிலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்:
வட்டி விகிதம் டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட் தொகையினை பொறுத்து அமையும். ஆனால் இதற்கான வட்டி தொகையாக 3% முதல் 7.75% வரை வழங்கபடுகிறது.
முதிர்வு காலம்:
7 நாட்கள் முதல் 10 வருடம் வரை என்பது இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆகும். அதேபோல் இந்த திட்டத்தில் சேரும் போதே உங்களுக்கான முதிர்வு காலத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
New Scheme👇👇 மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்
2 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
Normal Citizen:
2 லட்சம் ரூபாயினை 3 வருட கால அளவில் டெபாசிட் செய்தால் உங்களுக்கு வட்டி விகிதமாக 7% அளிக்கப்படும்.
அப்படி என்றால் 3 வருடத்திற்கான வட்டி தொகையாக 45,009 ரூபாயும், அசல் தொகையாக 2,45,009 ரூபாயினையும் பெறலாம்.
Senior Citizen:
மூத்த குடிமக்களுக்கு 3 வருடத்திற்க்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. ஆகவே 3 வருடத்திற்கு மொத்த வட்டியாக 48,459 ரூபாயும், அசல் தொகையாக 2,48,459 ரூபாயும்அளிக்கப்படுகிறது.
New Scheme👇👇 மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் 3 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்
| மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |














