வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 ரூபாய் கூட செலுத்தாமல் 3 லட்ச ரூபாய் தரும் அரசு திட்டம்..!

Updated On: May 19, 2023 7:06 AM
Follow Us:
how to apply 3 lakhs for 18 year old girls girl child protection program
---Advertisement---
Advertisement

1 ரூ. கூட செலுத்தாமல் 3 லட்ச ரூபாய் பெற/ தமிழக அரசு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் – How to apply 3 lakhs for 18 year old girls girl child protection program

நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது தமிழக அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பற்றிய முழுமையான விவரங்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறிய போகிறோம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் குழந்தைகள் மூன்று லட்சம் ரூபாய் வரை இலவசமாக பெற முடியும். சரி வாங்க இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்களை அறியலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தமிழக அரசு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:

இந்த திட்டத்தில் ஸ்கீம் 1 ஸ்கீம் 2 என்று இரண்டு வகைகள் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களை பற்றி ஒவ்வொன்றாக அறியலாம் வாங்க.

ஸ்கீம் 1:

ஸ்கீம் ஒன்றை பொறுத்தவரை உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்க கூடாது.

அந்த பெண் குழந்தை வயதின் மூன்று வயதிற்குள் இருக்க வேண்டும்.

அந்த குழந்தையின் ஆண்டு வருமானம் 72,000/- ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

மேலும் அந்த குழந்தையின் அம்மா அல்லது அப்பா என்றாவது ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு (Family planning) செய்திருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் போஸ்ட் ஆபீஸில் மாதம் 1300 ரூபாய் வட்டி பெறக்கூடிய திட்டம்..!

தேவைப்படும் ஆவணங்கள்:

  • பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
  • பெற்றோரின் வயது ப்ரூப்
  • Family planning ப்ரூப்
  • வருமான சான்றிதழ்
  • ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் கொடுக்க வேண்டும்.
  • முகவரி சான்றிதழ்
  • சாதி சான்றிதழ்
  • ரேஷன் கார்டு
  • ஆதார் கார்டு
  • Family Photos

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களும் தேவைப்படும்.

இந்த திட்டத்திற்கு எப்படி அப்ளை செய்வது? – how to apply 3 lakhs for 18 year old girls girl child protection program

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு உங்கள் ஊரில் உள்ள இ சேவை மையாயத்திற்கு எடுத்து சென்று அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்ய செல்லும் போது மேல் குறிப்பிட்டலுள்ள ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழையும் எடுத்து செல்லுங்கள்.

3 லட்சம் பணம் எப்படி வழங்கப்படுகிறது?

Tamil Nadu Power Finance & Infrastructure Development Corporation Ltd. அந்த பெண் குழந்தையின் பெயரில் 50,000/- ரூபாய்க்கு பிக்சட் டெபாசிட் செய்வார்கள். இதற்கான ரிஷிப்டினை குழந்தையின் பெற்றோரிடம் கொடுத்துவிடுவார்கள்.

ஆக அந்த குழந்தையின் பெற்றோர் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரினிவல்செய்துகொண்டே வர வேண்டும்.

குழந்தையின் 18 வயதில் 3,00,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணத்தை பெரும் பொழுது உங்கள் பெண் குழந்தை கண்டிப்பாக 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே அந்த 3 லட்சம் உங்களுக்கு வழங்கப்படும்.

ஸ்கீம் 2:

இந்த ஸ்கீம் பொறுத்தவரை உங்களுக்கு 2 பெண் குழந்தை இருந்தாலும் அப்ளை செய்யலாம். ஆனால் ஆண் குழந்தை இருக்க கூடாது.

இந்த ஸ்கீமிற்கு நீங்கள் எப்போது அப்ளை செய்யலாம் என்றால் உங்கள் இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியடைவதற்குள் அப்ளை செய்யலாம்.

மற்றபடி ஸ்கீம் ஒன்றி கூறப்பட்டுள்ளது போல் தான் இந்த ஸ்கீம் இரண்டிற்கும். இருப்பினும்இவற்றில் பணம் வழங்கும் முறை மாறுபடும்.

அதாவது Tamil Nadu Power Finance & Infrastructure Development Corporation Ltd. அந்த இரண்டுபெண் குழந்தையின் பெயரில் தலா 50,000/- ரூபாய்க்கு பிக்சட் டெபாசிட் செய்வார்கள். இதற்கான ரிஷிப்டினை குழந்தையின் பெற்றோரிடம் கொடுத்துவிடுவார்கள்.

ஆக அந்த குழந்தையின் பெற்றோர் ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் ரினிவல்செய்துகொண்டே வர வேண்டும்.

அந்த இரண்டு பெண் குழந்தைக்கு 18 வயது ஆகிய பிறகு ஒவ்வொரு குழந்தைக்கும் 1,50,000 ரூபாய் வழங்கப்படும். இந்த பணத்தை பெரும் பொழுது உங்கள் பெண் குழந்தை கண்டிப்பாக 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே அந்த 3 லட்சம் உங்களுக்கு வழங்கப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரூபாய் 1,000 முதலீட்டில் வட்டியோ அதிகம்..! 2 மடங்கு லாபம்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → Scheme in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now