மத்திய அரசின் இலவச சிலிண்டர் எப்படி வாங்குவது..?

How to Apply Free Gas Cylinder

இலவச சிலிண்டர் வாங்குவது எப்படி | Ujjwala Yojana free gas cylinder Apply Online

How to Apply Free Gas Cylinder / இலவச சிலிண்டர் எப்படி வாங்குவது: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம்-ல் மத்திய அரசின் இலவச சமையல் சிலிண்டர் எப்படி பெறுவது என்பதை பற்றித்தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களின் நலன் கருதி, பிரதம மந்திரியின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது உத்திர பிரதேசத்தில் 2016-ம் ஆண்டு மே 01-ம் தேதி மத்திய அரசால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் நாடு முழுவதுமாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு ஐந்து கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. சரி இப்போது இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று விரிவாக படித்தறியலாம்..!

மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் 2021..! ரூ 2.67 லட்சம் மானியம் பெறுவது எப்படி?

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்

தகுதி:

மத்திய அரசின் மூலம் இலவச சிலிண்டர் வாங்குபவர்கள் இதற்கு முன் சிலிண்டர் இணைப்புகளை பெற்றிருக்க கூடாது.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சான்றிதழ்:

இலவச சிலிண்டர் இணைப்பு திட்டமானது குடும்பத்தில் இருக்கும் பெண்களுடைய பெயரில் தான் சிலிண்டர் வழங்கப்படும்.

இலவச சிலிண்டர் திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்களாக, நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவரிடம் இருந்து வறுமைக்கோடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இலவச சிலிண்டர் பெறுவது எப்படி – தேவைப்படும் ஆவணம்:

மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தில் பயன்பெறும் விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சாதி சான்றிதழ், முகவரி ஆவணம், விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், ஜன் தன் வங்கிக் கணக்கு அல்லது பேங்க் பாஸ்புக் போன்றவை தேவைப்படும் ஆவணமாகும்.

மேலும் இதற்கான விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேலே குறிப்பிடப்பட்ட ஆவணங்களுடன் அருகிலுள்ள கேஸ் ஏஜென்சியில் சமர்ப்பிக்க வேண்டும்.

பயன்:

இந்த பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண்ணுடன், மொபைல் எண் கட்டாயமாக பதிவு செய்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் முதல் முறையாக சிலிண்டர் இணைப்பை பெறும்போது, அவற்றிற்கான பணத்தொகை விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.

அந்த பணத்தை பயன்படுத்தி மத்திய அரசின் இலவச சிலிண்டர் இணைப்பை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயனடையும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு ஒரு இலவச சிலிண்டர் மட்டுமே பெற முடியும்.

இந்த பதிவானது அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்ற நண்பர்களுக்கும் ஷேர் செய்யவும்.. நன்றி வணக்கம்..!

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil