கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி?

Advertisement

தனிநபர் கடன் வாங்குவது எப்படி? | Kooturavu Bank Loan Details in Tamil | கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவது எப்படி

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன்: வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் பெறுவது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம். இன்றைய தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைத்து இளைஞர்களும் தனி நபர் கடன் பெறுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வீட்டு சூழ்நிலைக்காக பல இடங்களில் கடன் பெறுவதற்கு வங்கிகளில் மொத்தமாக லோன் எடுப்பது சிறந்தது என்று பலரின் மனதிலும் இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசானது இதற்கு முன் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 3 லட்சம் வரை தனி நபர் கடனாக வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வங்கி ஊழியர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டது. கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குவதற்கு என்னென்ன விதிமுறைகள், தவணை காலம் போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்துக்கொள்ளுவோம்.

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் பெறுவது எப்படி.? | Co Operative Bank Loan Details in Tamil:

கூட்டுறவு வங்கி தனிநபர் கடன் விவரங்கள் | Kooturavu Bank Loan Details in Tamil:

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு கடன் தொகை வழங்கப்பட்டு வந்தது. கூட்டுறவு வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு 3 லட்சம் தனிநபர் கடனும், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாயும் தனிநபர் கடனாக வழங்கப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க வங்கியில் வேலை பார்ப்பவர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக தமிழக அரசு உயர்த்தப்பட்டது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 6 லட்சத்திலிருந்து 12 லட்சமாக உயர்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து சில வேலையாட்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களாலும், சில மண்டல இணைப் பதிவாளர்களாலும், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களாலும், சில மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் முன்னேற்ற சங்கங்களாலும், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தனிநபர் கடனானது ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இருந்தாலும் இத்தகைய கடனைப் பெறுவதற்கு தமிழக அரசானது சில விதிமுறைகளை விதித்தது. அவற்றை கீழே படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்:

அரசின் நிபந்தனைகள்:

  • கூட்டுறவு வங்கியில் பெறப்படும் தனிநபர் கடனின் தவணை காலமானது 120 மாதங்கள் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
  • கடனிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அதிகபட்ச கடன் அளவு ரூ.15 லட்சம் அல்லது பயனாளர்கள் பெறக்கூடிய முழு ஊதியத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அந்த தொகை கடனாக வழங்கப்பட வேண்டும்.
  • வழங்கப்பட வேண்டிய கடன் தொகையில் பத்தில் ஒரு பங்கு பங்குத் தொகையாக கடனை பெறக்கூடிய நபர்களிடமிருந்து பெற வேண்டும்.
  • மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கும் சங்கங்கள் 5% பங்குத்தொகை பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1 / 2019 ( ந.க .59115 / 2018 / வஆ 1 ) நாள் 03.01.2019 – இல் தெரிவிக்கப்பட்டுள்ள படி கடனை வசூல் செய்ய  வேண்டும்.
  • பணியாளர்களின் முழு சம்பளத்தில் இருந்து அனைத்து பிடித்தங்களும் பிடிக்கப்பட்டு கடனாளர் வீட்டிற்கு கொண்டு செல்லும் சம்பளம் அவர்களுடைய மொத்த சம்பளத்தில் 25% குறைவாக இருத்தல் கூடாது.
  • பணியாளர்கள் வேலை செய்யும் பணியிட சம்பளம் வழங்கும் அலுவலர்களுடன் ஒப்பந்தத்தினை ஏற்படுத்திய பிறகு தான் கடன் தொகையை வழங்கப்படும்.
  • பணியாளர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட சரக துணைப்பதிவாளரிடம் தக்க துணை விதித்திருத்தங்கள் மேற்கொண்டு பதிவு செய்த பின்னரே புதிய உச்ச வரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement