போஸ்ட் ஆபீஸில் RD திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன..?

how to get loan on rd in post office in tamil

Post Office RD Loan Scheme in Tamil

இதுநாள் வரையிலும் நாம் நிறைய திட்டத்தின் கீழ் பணத்தை ஏதோ ஒரு தேவைக்காக சேமித்து வருகிறோம். பணத்தினை நாம் சேமிப்பது போலவே கடன் வாங்குவதும் இயல்பான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் நாம் அரசு சார்ந்த நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்களில் வீட்டு கடன், படிப்பிற்கான கடன் என்ற முறையில் பணத்தினை லோன் முறையில் வாங்கி இருப்போம். ஆனால் நாம் எப்படி போஸ்ட் ஆபீஸில் பணத்தை சேமித்து பயன் அடைகிறோமோ அதனை போலவே இனி போஸ்ட் ஆபீஸிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம். அதனால் போஸ்ட் ஆபீஸ் மூலம் லோன் எந்த திட்டத்தின் கீழ் பெறலாம் என்று நீங்கள் தெரிந்துக்கொண்டு பயனுள்ள 4 பேருக்கு தெரிவிக்கலாம் வாருங்கள்.

How to Get Loan On RD in Post Office in Tamil:

மாதந்தோறும் குறிப்பிட்ட அளவிலான தொகையினை 5 வருடம் செலுத்தி போஸ்ட் ஆபீஸில் சேமித்து 5 வரும் முடிந்த பிறகு சேமித்த தொகை + வட்டி விகிதம் இரண்டையும் சேர்த்து பெரும் முறையே போஸ்ட் ஆபீஸ் Recurring Deposit திட்டம் ஆகும். 

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெரும் வசதியும் உள்ளது. அதன் மூலம் கடன் பெறுவதற்கான விதிமுறைகள் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 மாதந்தோறும் 10,000 ரூபாய் வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்..!

கடன் பெறுவதற்கான விதிமுறை:

நீங்கள் Recurring Deposit திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக 1 வருடம் கட்டாயமாக குறிப்பிட்ட தொகையினை செலுத்தி இருக்க வேண்டும்.

அதுபோல நீங்கள் குறிப்பிட்ட தொகையினை மட்டும் செலுத்திவிட்டு அதன் பிறகு இடையில் அப்படியே விட்டு விட்டால் லோன் பெற முடியாது.

உங்களுடைய கணக்கில் நீங்கள் சேமித்து வைத்துள்ள தொகையில் இருந்து 50% மட்டும் லோன் தொகையாக பெறலாம். அதாவது நீங்கள் மாதந்தோறும் 5,000 ரூபாய் செலுத்தி வந்தால் 2 வருடத்தில் 1,20,000 ரூபாயினை நீங்கள் சேமித்து வைத்து இருப்பீர்கள்.

இப்போது உங்களுடைய கணக்கில் உள்ள சேமிப்பு தொகையில் இருந்து 3-வது வருடம் 60,000 ரூபாயினை லோனாக பெற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் பெரும் குறிப்பிட்ட லோன் தொகையினை மாதந்தோறும் அல்லது மொத்தமாக எப்படி வேண்டுமானாலும் Recurring Deposit முடிவடையும் 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

இதனையுடைய வட்டி விகிதமானது நீங்கள் லோனை பெற்ற நாள் முதல் கடனை செலுத்தும் நாள் வரை கணக்கில் எடுத்துகொள்ளப்படும்.

ஒருவேளை நீங்கள் 5 வருடத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை என்றால் உங்களுடைய Recurring Deposit திட்டத்தில் மீதம் உள்ள தொகையில் இருந்து லோன் தொகை + வட்டி தொகை இரண்டும் பிடிக்கப்பட்டு மீதும் இருக்கின்ற தொகை உங்களுக்கு வழங்கப்படும்.

இதுவே Recurring Deposit திட்டத்தின் கீழ் லோன் பெறுவதற்கான விதிமுறையாகும். மேலும் இந்த லோனை உங்களுடைய Recurring Deposit உள்ள போஸ்ட் ஆபீஸில் பெற்றுக்கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Rs.3,915/- செலுத்தினால் Rs.26,25,000/- பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்..!

தேவையான ஆவணங்கள்:

  1. Recurring Deposit திட்டத்தின் கடன் படிவம்
  2. RD புத்தகம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil