40% மானியத்துடன் சோலார் பேனல் அமைப்பது எப்படி?

Advertisement

சோலார் பேனல் மானியம் பெறுவது எப்படி?

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பான வணக்கங்கள் இந்த பதிவில் வீடு மற்றும் நிறுவனங்களில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசு 40% வழங்குகிறதாம். ஆகவே வீட்டிலோ அல்லது நிறுவனங்களிலு சோலார் பேனல் அமைக்க 40 சதவீதம் இந்த மானிய தொகையை யாரெல்லாம் பெற முடியும், மானிய தொகையாக எவ்வளவு தொகை கிடைக்கும். இந்த மானியம் பெற என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

How to Get Solar Panel Subsidy in Tamil..!

மானியம் வழங்குபவர்:

வீட்டிற்கோ அல்லது நிறுவனத்துக்கோ சோலார் பேனல் அமைக்க விருப்பவர்களுக்கு மத்திய அரசு 40 சதவீதம் மானியம் தொகையை வழங்குகிறது. இந்த மானியம் Ministry of New and Renewable Energy என்ற அமைச்சகத்தினால் வழங்கப்படுகிறது. மேலும் இந்த DISCOM என்ற நிறுவனம் தான் சோலார் பேனலை விநியோகம் செய்கின்றது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

சோலார் பேனல் மானியம் பெறுவதற்கு அனைவருமே விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்:

  • பாஸ்போட் அளவுள்ள புகைப்படம்
  • ஆதார் கார்டு
  • மின் அட்டை

இந்த மூன்று ஆவணக்கள் இருந்தால் போதும் நீங்கள் இந்த மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மானிய தொகை வழங்கப்படும் முறை:

  • 1k வாட்ஸ் முதல்– 3k வாட்ஸ் வரை அப்ளை செய்ப்பவர்களுக்கு = 40% மானியம் வழங்கப்படுகிறது.
  • 4k வாட்ஸ் முதல் – 10k வாட்ஸ் வரை அப்ளை செய்ப்பவர்களுக்கு  = 20% மானியம் வழங்கபடுகிறது.

10k  வாட்ஸ் வரைக்கும் மானியம் தொகை பெற்று சோலார் பேனல் அமைத்துக்கொள்ள முடியும். 10k வாட்ஸ் மேல் மானியம் தொகை வழங்கப்படாது.

சோலார் பேனல் விலை 2024

சோலார் பேனல் மானியம் பெறுவது எப்படி?

40% மானியத்துடன் வீட்டிற்கு சோலார் அமைக்க விருப்பவர்கள் https://solarrooftop.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும் அவரில் நீங்கள் இந்த மானியம் பற்றிய முழுமையான விவரங்களை பெறமுடியும். மேலும் மானியம் பெற ஆன்லைன் மூலம் இந்த இணையதளம் வழியாக நீங்கள்  விண்ணப்பிக்க முடியும்.

 

இதுபோன்று பல பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> www.pothunalam.com

 

Advertisement