70 ரூபாயை இப்படி சேமித்தால் Rs.10,65,300 பெறலாம்.. சேமிப்பதற்கான சிறந்த வழி..!

How to Save Money in Tamil

தினமும் 70 ரூபாய் இப்படி சேமித்தால் Rs.10,65,300 பெறலாம்.. சேமிப்பதற்கான சிறந்த வழி..! How to Save Money in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் சேமித்து அதனை மாதம் மாதம் ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை நாம் பெற முடியும். அந்த வகையில் நாம் தினமும் 70 ரூபாய் சேமித்து அதனை PPF, SSY, மியூச்சுவல் பண்ட் போன்ற சிறந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் லாபத்தை பெற முடியும்  அது எப்படி என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

யாருக்கெல்லாம் இந்த சேமிப்பு திட்டம் சிறந்தது?

இல்லத்தரசிகளுக்கு, நடுத்தர குடும்பத்தினர், குறைவாக ஊதியம் வாங்குபவர்கள் மற்றும் இப்போது தான் புதிதாக சேமிக்க போகிறேன் என்பவர்களுக்கெல்லாம் இந்த சேமிப்பு திட்டம் ஏற்றதாகும்.

அதேபோல் சேமிக்க நினைக்கும் எவராக இருந்தாலும் சரி, பணத்தை எதற்காக சேமிக்கிறோம் என்பதற்கான குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் பிள்ளையின் படிப்பிற்கு, திருமணத்திற்கு, கடனை அடைப்பதற்கு, வாகனம் வாங்குவதற்கு என்று இது போன்று உங்களுக்கான ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல் இந்த சேமிப்பை எத்தனை நாளில் சேமிக்க வேண்டும், எதற்காக சேமிக்க வேண்டும் என்று ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் வருமானத்திற்கு தகுந்தது போல் சேமிப்பு தொகையை தினமும் எடுத்து வையுங்கள். சரி வாங்க நாம் சேமிக்கும் பணத்தை எவற்றில் எல்லாம் சேமிக்கலாம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1,000 ரூபாய் பென்ஷன் தொகையை 5,000 ரூபாயாக உயர்த்தலாம்..!

How to Save Money in Tamil..!

ஒரு வருடத்துக்கான முதலீடு:

தினமும் ஒரு நாளுக்கு 70 ரூபாய் என்று மாதத்திற்கு 30 நாள் சேமித்து வர உங்களால ஒரு மாதத்திற்கு 2100 ரூபாய் சேமிக்க முடியும். இவ்வாறு உங்களில் தினமும் 70 ரூபாய் சேமிக்க முடியும் என்றால் ஒரு வருடத்தில் உங்களால 24000 ரூபாய் சேமிக்க முடியும்.  இந்த தொகையில் நீங்கள் இரண்டு கிராம் வரை தங்கம் வாங்க முடியும். இதுவே வெள்ளி என்றால் 600 கிராம் வரை வெள்ளி வாங்க முடியும்.

குறுகிய காலம் முதலீடு:

அதுவே நீங்கள் சேமிக்கும் தொகையை நீண்ட காலம் அதாவது 5 வருடம் 10 வருடம் என்று நீண்ட கால முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தால் அதற்கான லாபம் என்பது பல மண்டங்கு கிடைக்கும். இதற்கான முதலீட்டு திட்டம் எதுவென்றால் RD, FD என்று சொல்லலாம்.

இவற்றில் RD என்று பார்க்கும் போது மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வரலாம். அதுவே FD என்று பார்க்கும் போதும் ஒரு குறிப்பிட்ட பெரிய தொகையை ஒரே ஒரு முறை மட்டும் லம்சமாக முதலீடு செய்து அதற்கான கால அளவு முடிந்த பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டியும் சேர்த்து லாபமாக பெறலாம்.

RD-யில் முதலீடு செய்வதாக இருந்தால் மாதம் மாதம் 2000 ரூபாய் என்று 5 வருடம் முதலீடு செய்து வரவேண்டி இருக்கும். இந்த RD-க்கு வங்கியில் தற்பொழுது வழங்கப்படும் வட்டி 6.5% ஆகும். அதுவே அஞ்சல் அலுவலகம் என்றால் 6.2% வழங்குகிறார்கள்.

இவற்றில் 5 வருடம் நாம் டெபாசிட் செய்து வந்தோம் என்றால் 1,20,000/- ரூபாய் முதலீடு செய்திருப்போம், அதற்கான வட்டி 22,000/- ரூபாய் ஆகும். ஆக டெபாசிட் தொகை + வட்டி ஆகிய இரண்டியும் சேர்த்து உங்களுக்கு 1,42,000/- ரூபாய் லாபமாக கிடைக்கும்.

அதுவே நீங்கள் 10 வருடம் முதலீடு செய்ய வேண்டும் என்றால் உங்களுடைய முதலீட்டு தொகை 2,40,000/- அதற்கான வட்டி 98,000/- ரூபாய் ஆகும். ஆக 10 வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகை + வட்டி ஆகிய இரண்டியும் சேர்த்து 3,34,000/- ரூபாய் லாபமாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5000 ரூபாய் போஸ்ட் ஆபீஸில் செலுத்தி Rs. 26,97,247 பெறக்கூடிய அசத்தலான சேமிப்பு திட்டம்..!

நீண்ட கால முதலீடு:

நீங்கள் சேமித்த தொகையை நீண்டகாலம் அதாவது PPF, SSY, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்யும் போது உங்கள் எதிர்காலத்திற்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். அதாவது உங்கள் குழந்தையின் கல்லூரி படிப்பிற்கு, திருமணத்திற்கு இது போன்ற விஷயங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நீண்ட கால முதலீட்டில் PPF-யில் முதலீடு செய்யும் போது உங்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி 7.1% ஆகும். ஆக 15 வருடத்திற்கு மாதம் மாதம் இந்த PPF சேமிப்பு திட்டத்தில் 2000 ரூபாய் முதலீடு செய்து வரும் போது உங்களது டெபாசிட் தொகை என்று பார்கத்தால் 3,60,000/- ரூபாய் ஆகும். இதற்கான வட்டி 2,90,913 ரூபாய் ஆகும். ஆக 15 வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகை மற்றும் வட்டி ஆகிய இரண்டயும் சேர்த்து உங்களுக்கு 6,50,000/- ரூபாய் லாபமாக கிடைக்கும்.

அதுவே இந்த திட்டத்தில் 20 வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால் உங்களது டெபாசிட் தொகை 4,80,000/- ரூபாய் ஆகும். அதற்கான வட்டி 5,85,326/- ரூபாய் வழங்கப்படும். ஆக 20 வருடம் கழித்து உங்களது டெபாசிட் தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டயும் சேர்த்து உங்களுக்கு Rs.10,65,300/- லாபமாக கிடைக்கும்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil