Mahila Samman Saving Scheme Money Withdrawan New in Tamil
How to Withdrawan MSSC Scheme in Post Office in Tamil – நண்பர்களுக்கு வணக்கம்.. அஞ்சல் அலுவலகத்தில் பெண்களுக்காக மகளிர் சம்மான் சேமிப்பு பத்திரம் எனப்படும் ஒரு புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சேமிப்பு திட்டம் குறித்த அனைத்து முழுமையான விவரங்களை இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம். அதாவது இந்த சேமிப்பு திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு முதலீடு செய்யலாம், இந்த திட்டத்திற்கு எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது, யாரெல்லாம் பயன்பெறலாம், இந்த திட்டத்தில் இணைந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் எவ்வளவு தொகையை திரும்ப பெறலாம் என்பது குறித்து இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
How to Withdrawan MSSC Scheme in Post Office in Tamil:
மத்திய அரசு பெண்களுக்காக மகளிர் சம்மன் சேமிப்பு பத்திரம் என்கின்ற ஒரு புதிய திட்டத்தை போஸ்ட் ஆபிசில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த திட்டத்தில் பெண்கள் மட்டும் தான் இணைய முடியும்.
இந்த திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய், அதிகபட்ச முதலீட்டு தொகை என்று பார்த்தால் 2 லட்சம் ரூபாய் ஆகும்.
இது ஒரு Single Investment ஆகும். அதாவது இந்த திட்டத்தின் இடைப்பட்ட காலங்களில் நீங்கள் எந்த ஒரு தொகையும் முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இத்திட்டத்தின் கால அளவு இரண்டு வருடம் ஆகும்.
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 7.50% வழங்கபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
5 வருடத்தில் 6,00,000 பெரும் அருமையான 2 திட்டங்கள்..! மிஸ் பண்ணிடாதீங்க..!
Withdrawal from Account:
சரி இந்த திட்டத்தில் இணைந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு பணம் தேவை ஏற்பட்டால் எவ்வளவு தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று இப்பொழுது பார்ப்போம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்த ஒரு வருடத்தில் நீங்கள் எந்த விதமான தொகையையும் திரும்ப பெற முடியாது. இருப்பினும் ஒரு வருடம் கழித்து 40 சதவீதம் தொகையை நீங்கள் Withdrawal செய்துகொள்ளலாம்.
அதாவது நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்தீர்களோ அவற்றில் 40% தொகையை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அவற்றில் 40,000 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
அதுவே 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால் 80,000 ரூபாயை Withdrawal செய்துகொள்ளலாம்.
Withdrawal செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்?
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் நீங்கள் இணைந்த இடைப்பட்ட காலத்தில் அதாவது ஒரு வருடம் கழித்து முதலீடு செய்த தொகையை பெறுவதற்கு ஒரு Application Form-ஐ பூர்த்தி செய்து அஞ்சல் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அந்த Application Form-ஐ நீங்கள் பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும் நீங்கள் டெபாசிட் செய்த தொகையில் இருந்து 40 சதவீதம் தொகையை திரும்ப பெற முடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதந்தோறும் 420 ரூபாய் செலுத்தினால் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் பெறும் அரசின் திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |