மாதம் Rs.6300/- வட்டி தரும் அருமையான சேமிப்பு திட்டம்..!

Advertisement

ICICI Bank Fixed Deposit Interest Rates

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. தினமும் ஒவ்வொரு வகையான சேமிப்பு திட்டங்களை பற்றி நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் பார்த்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் 2023-ஆம் ஆண்டு தற்பொழுது ICICI வங்கியின் பிக்சட் டெபாசிட்டிற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது. நாம் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி நமக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ICICI Bank Fixed Deposit Scheme:

இந்த நவம்பர் மாதம் நீங்கள் ICICI வங்கியில் ஒரு பிக்சட் டெபாசிட் கணக்கை ஓபன் செய்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பிக்சட் டெபாசிட் கணக்கிற்கு தற்பொழுது எவ்வளவு வட்டி வழங்கபடுகிறது என்று பார்க்கலாம் வாங்க. ,உதலில் பிக்சட் டெபாசிட்டை பற்றி தெரிந்துகொள்வோம்.

FD என்றால் என்ன?

ரிஸ்க் எடுக்க தயங்கும் முதலீட்டாளர்களுக்கு FD கணக்குகள் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் நீங்கள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. வங்கிகள் அல்லது NBFC-க்களால் வழங்கப்படும் நிதி திடமான இது முதலீட்டாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மெச்சூரிட்டி தேதி வரை வழக்கமான சேவிங்ஸ் அக்கவுண்ட்டை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரே முறை தான் பணத்தை போடுவீர்கள். மெச்சூரிட்டியின் முடிவில் நீங்கள் செலுத்தியுள்ள மொத்த முதலீட்டு தொகையுடன் சேர்த்து குறிப்பிட்ட அளவிலான வட்டி தொகையையும் பெறுவீர்கள்.

ICICI வங்கியில் நீங்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால் குறைந்தபட்சம் முதலீட்டு தொகையாக 10,000/- ரூபாய் முதல் அதிகபட்ச தொகையாக 2 கோடி ரூபாய் முதல் முதலீடு செய்யாலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தபால் துறையில் 100 ரூபாய் சேமித்தால் 12 லட்சம் கிடைக்கும் அசத்தலான திட்டம்

இந்த சேமிப்பு திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவருக்கு கூடுதல் வட்டி வழங்கப்டுகிறது.

இந்த திட்டத்தில் வழங்கப்படும் வட்டியினை நீங்கள் Monthly, Quaarterly, Cumulative ஆகிய முறைகளில் பெற்றுக்கொள்ளலாம். இவற்றில் நீங்கள் Cumulative என்ற ஆப்ஷனை தேர்வு செய்யும் போது உங்கள் மெச்சுரிட்டி காலம் முடியும் போது அதிக வட்டியை பெற முடியும். அதாவது Cumulative ஆப்ஷனை தேர்வு செய்யும்போது இவற்றில் வழங்கப்படும் வட்டிக்கே வட்டி கிடைக்கும் அதாவது கூட்டு வட்டியாக கிடைக்கும்.

வட்டி:

முதலீட்டு காலம் பொது பிரிவினர்  மூத்த குடிமக்கள்
7 நாட்கள் முதல் 29 நாட்களுக்கு 3% 3.50%
30 நாட்கள் முதல் 45 நாட்களுக்கு  3.50% 4%
46 நாட்கள் முதல் 60 நாட்களுக்கு  4.25% 4.75%
61 நாட்கள் முதல் 90 நாட்களுக்கு  4.50% 5%
91 நாட்கள் முதல் 184 நாட்களுக்கு  4.75% 5.25%
185 நாட்கள் முதல்  5.75% 6.25%
271 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கு  6% 6.50%
ஒரு வருடம் முதல் 15 மாதங்களுக்கு  6.70% 7.20%
15 மாதங்கள் முதல் 2 வருடத்திற்கு  7.10% 7.60%
2 வருடங்கள் முதல் 5 வருடத்திற்கு  7% 7.50%
5 வருடம் முதல் 10 வருடத்திற்கு  6.90% 7.50%

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 2000 ரூபாய் சேமித்தால் போதும்.. வட்டியுடன் சேர்த்து 10,78,898 ரூபாய் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டம்..!

ICICI வங்கியின் பிக்சட் டெபாசிட்டில் இரண்டு வருடத்திற்கு டெபாசிட் செய்தால் மாதம் மாதம் எவ்வளவு வட்டி கிடைக்கும்?

வட்டி 7.10% 7.60%
டெபாசிட் தொகை பொது பிரிவினர் மூத்த குடிமக்கள்
10,000/- 59 63
25,000/- 147 158
50,000/- 294 317
1,00,000/- 588 633
3,00,000/- 1765 1900
5,00,000/- 2941 3167
10,00,000/- 5882 6335

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement