ICICI Bank Scheme For Girl Child
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியாக திகழும் ICICI வங்கி மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படுகிறது. இவ்வங்கி பொதுமக்களுக்கு பல வகையான திட்டங்களையும் வங்கி கடன்களையும் வழங்கி வருகிறது. குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவிதமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில், இவ்வங்கியின் பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டங்களை பின்வருமாறு விவரித்துள்ளோம். எனவே, இப்பதிவை முழுவதுமாக படித்து பெண்குழந்தைகளுக்கு இருக்கும் சேமிப்பு திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ICICI வங்கியின் பெண்குழந்தை திட்டத்தின் வகைகள்:
- Sukanya Samriddhi Yojana
- ICICI Pru Smart Kid Plan
- ICICI Pru Signature Plan
- ICICI Pru Guaranteed Income for Tomorrow
ICICI வங்கியின் பெண்குழந்தை திட்டத்தின் விவரங்கள்:
திட்டத்தின் பெயர் | திட்டத்தின் வகை | வயது தகுதி |
சுகன்யா சம்ரித்தி யோஜனா | சேமிப்பு கணக்கு | இத்திட்டத்தில், 10 வயது வரை உள்ள பெண்குழந்தைகளின் பெயரில் கணக்கை திறக்கலாம். |
ஐசிஐசிஐ ப்ரூ ஸ்மார்ட் கிட் திட்டம் | குறைந்த யூலிப் (Unit Linked Insurance Plan) | குறைந்தபட்ச வயது தகுதி 20 ஆண்டுகள் ஆகும். |
ஐசிஐசிஐ ப்ரூ சிக்னேச்சர் திட்டம் | யூலிப் (Unit Linked Insurance Plan) | பிறந்த குழந்தை முதல் 60 வயது வரை இத்திட்டத்தில் சேரலாம். |
ஐசிஐசிஐ ப்ரூ நாளைய வருமானத்திற்கு உத்தரவாதம் | சேமிப்பு அடிப்படையிலான ஆயுள் காப்பீடு | குறைந்தபட்ச நுழைவு வயது 18 ஆண்டுகள் ஆகும். |
மூன்று மாதத்திற்கு ஒரு முறை 4,100 ரூபாய் வட்டி கிடைக்கும் சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்..!
மேலே குறிப்பிட்டுள்ள ICICI வங்கியின் பெண்குழந்தை திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டதின் விவரங்களை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்:
இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவையையும் பாதுகாப்பையும் கருதி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தையின் பெயரில் கணக்கை திறக்கலாம்.
வட்டி தொகை:
ICICI வங்கியின் பெண்குழந்தை திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 8% வடிவிகிதம் அளிக்கப்படுகிறது.
டெபாசிட் காலம்:
இத்திட்டத்தில், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யலாம்.
முதிர்வு காலம்:
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், பெண் குழந்தைக்கு 18 வயது நிரம்பியதுடன் சேமிப்பு தொகையை பெறலாம்.
5 வருடத்தில் 7 லட்சம் கிடைக்கும் RD திட்டம்
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வருடாந்திர டெபாசிட் தொகை | டெபாசிட் காலம் | செலுத்திய மொத்த தொகை | மொத்த வட்டித்தொகை | கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
20 ஆயிரம் | 15 ஆண்டுகள் | 3,00,000 ரூபாய் | 5,97,938 ரூபாய் | 8,97,938 ரூபாய் |
எனவே, நீங்கள் ஒரு வருடத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் 15 ஆண்டுகளில் 3 லட்சம் ரூபாய் செலுத்தினால் இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் வட்டித்தொகையுடன் சேர்த்து 8,97,938 ரூபாய் பெறலாம்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |