IDBI New Scheme New Update in Tamil
நண்பர்களே உங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அருமையான சேமிப்பு திட்டத்தை பற்றி உங்களுக்கு தெரியபடுத்தபோகிறேன். நாம் Pothunalam.com பதிவில் நிறைய சேமிப்பு திட்டங்களை பற்றியும் ஒவ்வொரு நாளும் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களை பற்றியும் பதிவிட்டு வருகிறோம். அது அனைத்தையும் தெரிந்துகொள்ள நினைத்தால் 👉👉👉 Schemes in Tamil
நாம் அனைவருமே ஒவ்வொரு நாளும் சம்பாதித்து கொண்டு தான் இருக்கிறோம் அல்லவா. அதனை நாம் சரியான முறையில் தான் சேமித்து வருகிறோமா..? அல்லது அதனை பற்றி யோசித்தது உண்டா..? சரி அதை விடுங்க உங்களிடம் சேமித்த பணம் உள்ளது என்றால் அதன் மூலம் நல்ல வருமானம் பார்க்க நினைத்தால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் சேர்ந்து நல்ல வருமானத்தை பாருங்கள்..!
IDBI New Scheme New Update in Tamil:
IDBI வங்கி ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த திட்டத்தின் கால அளவாக 444 நாட்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். இந்த திட்டம் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்துள்ளார்கள்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்:
இந்த திட்டத்தில் குறைத்தபட்சமாக 10,000 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்த தொகைக்கான வட்டியை மாதம் மாதம், 3 மாதம் 1 வருடம் அல்லது 444 நாட்கள் கடைசியில் பெற்றுக் கொள்ளலாம்.
மத்திய அரசு பெண்களுக்காக அறிமுகம் செய்த புதிய சேமிப்பு திட்டம்
வட்டி:
இந்த திட்டத்தில் 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 7.15 சதவீதம் வட்டியும், 60 வயதிற்கு மேல் உள்ள சீனியர் சிட்டிசனுக்கு 7.65 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதன் பிறகு இந்த திட்டத்த்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி கீழ் உதாரணத்துடன் பார்க்கலாம் வாங்க..!
முதலீடு தொகை | வட்டி | மொத்தம் தொகை |
Rs.1,00,000/- | Rs.9,039/- | Rs.1,09,39/- |
Rs.5,00,000/- | Rs.45,199/- | Rs.5,45,199/- |
Rs.10,00,000/- | Rs.90,399/- | Rs.10,90,399/- |
சீனியர் சிட்டிசன் எவ்வளவு தொகை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.
முதலீடு தொகை | வட்டி | மொத்தம் தொகை |
Rs.1,00,000/- | Rs.9,695/- | Rs.1,09,695/- |
Rs.5,00,000/- | Rs.48,477/- | Rs.5,48,477/- |
Rs.10,00,000/- | Rs.96,954/- | Rs.10,96,954/- |
அதன் பின்பு உங்களிடம் மாதம் மாதம் 1000 ரூபாய் சேமிக்க முடியும் என்றால் கீழ் கொடுக்கபட்டுள்ள திட்டத்த்தில் சேர்ந்து பயன்பெறுங்கள்
ஏப்ரல் 4 தேதி முதல் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் ரூ.5,39,449 ரூபாய் வரை பெற முடியும்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |