IDFC வங்கியில் மாதம் 2000 ரூபாய் செலுத்தினால் 1 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.?

Advertisement

IDFC 2000 RD Interest Rate Calculator in Tamil 

பொதுவாக, நாம் எந்தவொரு விஷயத்தை செய்வதற்கு முன்பாக அதனை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அதாவது, நீங்கள் ஒரு வங்கியிலோ அல்லது பிற நிறுவனங்களிலோ கடன் பெற போகிறீர்கள் என்றால், அதற்கு முன்பாக நாம் பெரும் கடனிற்கு எவ்வளவு வட்டி.? கடன் காலம் எவ்வளவு.? உள்ளிட்ட பல விவரங்களை தெரிந்துகொள்வது முக்கியம். அதேபோல், நாம் வங்கியிலோ அல்லது தபால் துறையிலோ சேமிக்க போகிறோம் என்றால் அதனை பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்வது முக்கியம். எனவே, அந்த வகையில் வங்கிகளில் வழங்கக்கூடிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றான RD திட்டத்தின் விவரங்களை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு IDFC வங்கி வாடிக்கையாளராக இருந்து அவ்வங்கியில் வழங்கப்படும் RD திட்டத்தில் மாதம் 2000 ரூபாய் செலுத்தி வந்தால் 1 வருடத்திற்கு பிறகு,வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.? என்பது இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

IDFC RD Interest Rates 2023 Calculator in Tamil:

IDFC RD Interest Rates 2023 Calculator in Tamil

வட்டி விகிதம்:

IDFC வங்கியில் ஜெனரல் சிட்டிசன் மற்றும் சீனியர் சிட்டிசன் என இருவருக்கும் வெவ்வேறு வகையான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகிறது.

மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் கால அளவை பொருத்தும் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது .

கால அளவு ஜெனரல் சிட்டிசன் சீனியர் சிட்டிசன்
6 மாதம்  6.75% 7.25%
9 மாதம்  7% 7.50%
1 வருடம்  7.25% 7.75%
1 வருடம் 3 மாதங்கள் 7.25% 7.75%
1 வருடம் 6 மாதங்கள் 7.25% 7.75%
1 வருடம் 9 மாதங்கள் 7.25% 7.75%
2 ஆண்டுகள் 7.25% 7.75%
2 ஆண்டுகள் 3 மாதங்கள் 7.25% 7.75%
3 ஆண்டுகள் 7.25% 7.75%
3 ஆண்டுகள் 3 மாதங்கள் 7.20% 7.70%
4 ஆண்டுகள் 7.20% 7.70%
5 ஆண்டுகள் 7.20% 7.70%
7 ஆண்டுகள் 6 மாதங்கள் 7.20% 7.70%
10 ஆண்டுகள் 7.20% 7.70%

 

சேமிப்பு காலம்:

IDFC வங்கியில் RD திட்டத்திற்கான சேமிப்பு காலமாக குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

சேமிப்பு தொகை:

IDFC வங்கியில் RD திட்டத்தில் நீங்கள் குறைந்தப்பட்சம் 1000 ரூபாய் முதல் சேமிக்க தொடங்கலாம்.

IDFC வங்கியில் 20,000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் அசல் மற்றும் வட்டி எவ்வளவு கிடைக்கும்

எடுத்துக்காட்டு:

ஜெனரல் சிட்டிசன்:

IDFC வங்கியில் நீங்கள் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 2000 ரூபாய் சேமித்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கான வட்டி விகிதமாக 7.25% அளிக்கப்படுகிறது.

இந்த  1 வருட காலத்தில் நீங்கள் மொத்தம் 24,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, உங்களுக்கான மொத்த வட்டி தொகையாக 957 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆகவே, உங்களுக்கு 1 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து 24,957 ரூபாய் வழங்கப்படும்.

சீனியர் சிட்டிசன்:

IDFC வங்கியில் நீங்கள் 1 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 2000 ரூபாய் சேமித்து வந்தீர்கள் என்றால் உங்களுக்கான வட்டி விகிதமாக 7.75% அளிக்கப்படுகிறது.

இந்த 1 வருட காலத்தில் நீங்கள் மொத்தம் 24,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.

எனவே, இந்த வட்டி விகிதத்தை வைத்து கணக்கிடும்போது, உங்களுக்கான மொத்த வட்டி தொகையாக 1,027 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஆகவே, உங்களுக்கு 1 வருடத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து 25,027 ரூபாய் வழங்கப்படும்.

குறிப்பு: நீங்கள் சேமிக்கும் தொகை மற்றும் கால அளவை பொறுத்து உங்களுக்கான வட்டி தொகை மாறுபடும். 

3 லட்சம் செலுத்தி 4,34,984 ரூபாய் பெறக்கூடிய போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement