IDFC First Bank RD Scheme Details in Tamil
பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் நபர்கள் முதல் வேலைக்கு செல்லும், வீட்டில் இருக்கும் நபர்கள் என அனைவருக்கும் சேமிப்பு என்பது பற்றியும், அதனுடைய சிறப்பு பற்றியும் கட்டயமாக தெரிந்து இருக்கும். அந்த வகையில் சேமிப்பிற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு வங்கி முதல் போஸ்ட் ஆபீஸ் வரை என அனைத்திலும் உள்ள RD சேமிப்பு திட்டம் பற்றியும் தெரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
ஏனென்றால் மிகவும் குறைவான சேமிப்பு தொகையினை ஆரம்ப தொகையாகவும், மாதந்தோறும் சேமிப்பு தொகையினை கொண்ட ஒரு திட்டமாகவும் இருப்பது ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மட்டுமே. அப்படி பார்த்தால் உங்களது குழந்தையின் வருங்காலத்தை எண்ணியோ அல்லது உங்களது வருங்காலத்தில் எண்ணியோ மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை சேமிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த ஒன்றாக இருக்கும். ஆகவே இன்று IDFC வங்கியில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தினை பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஐடிஎப்சி பேங்க் ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:
வயது தளர்வு:
IDFC வங்கியில் வங்கியில் உள்ள RD திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் என யார் வேண்டுமானாலும் சேமிக்க தொடங்கலாம். மேலும் ஒருவர் தனியாக அல்லது கூட்டாக என இந்த கணக்கினை தொடங்கி சேமிக்கலாம்.
சேமிப்பு தொகை:
இதில் சேமிப்பு தொகையாக நீங்கள் குறைந்தப்பட்சமாக 100 ரூபாய் முதல் அதிகப்பட்சமாக 75,000 ரூபாய் வரையிலும் உங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சேமிக்கலாம்.
வட்டி விகிதம்%:
வட்டி விகிதத்தை பொறுத்தவரை இதில் மூத்த குடிமக்கள் மற்றும் சாதாரணமான மக்கள் என இருவருக்கும் அவர் அவரது சேமிப்பு காலத்தினை பொறுத்து தான் அமைகிறது.
அதன் படி பார்த்தால் வட்டி விகிதமாக 4.50% முதல் 8.25% வரை அளிக்கப்படுகிறது.
சேமிப்பு காலம்:
இதில் உங்களது சேமிப்பு காலமாக 6 மாதம் முதல் 10 வருடம் வரை வழங்கபடுகிறது. எனவே சேமிப்பு தொகை, சேமிப்பு காலம் என இவை இரண்டையும் உங்களது விருப்பப்படியே தேர்வு செய்யலாம்.
5 வருடத்தில் 4,28,197/- ரூபாய் சேமிக்க தினமும் இப்படி சேமித்து பாருங்க
IDFC First Bank RD Rates Calculator:
சேமிப்பு தொகை | சேமிப்பு காலம் | பொதுமக்கள் | சீனியர் சிட்டிசன் | ||
வட்டி தொகை (7%) | அசல் தொகை | வட்டி தொகை (7.5%) | அசல் தொகை | ||
1000 ரூபாய் | 5 வருடம் | 11,933 ரூபாய் | 71,933 ரூபாய் | 12,886 ரூபாய் | 72,886 ரூபாய் |
5,000 ரூபாய் | 5 வருடம் | 59,667 ரூபாய் | 3,59,667 ரூபாய் | 64,448 ரூபாய் | 3,64,448 ரூபாய் |
10,000 ரூபாய் | 5 வருடம் | 1,19,325 ரூபாய் | 7,19,325 ரூபாய் | 1,28,896 ரூபாய் | 7,28,896 ரூபாய் |
15,000 ரூபாய் | 5 வருடம் | 1,78,993 ரூபாய் | 10,78,993 ரூபாய் | 1,93,344 ரூபாய் | 10,93,344 ரூபாய் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |