IDFC Senior Citizen Savings Account Interest Rate
இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே ஓடி ஓடி சம்பாதிக்கிறார்கள். இந்த பணத்தை சம்பாதிப்பதை விட அதனை சரியானவற்றில் முதலீடு செய்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எதில் முதலீடு செய்வது என்ற குழப்பமும் பலரிடம் இருக்கிறது.
சில நபர்கள் முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகமாக இருந்தாலும் மெச்சூரிட்டி தொகை அதிகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில பேர் ரிஸ்க் எல்லாம் சரி பட்டு வராது, எனக்கு எதோ நான் சேமிக்கின்ற பணத்திற்க்கு தகுந்த வட்டி கிடைத்தால் போதுமானது என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் ரிஸ்க் இல்லாமல் வங்கியில் உள்ள சீனியர் சிட்டிசனுக்கான சேமிப்பு திட்டத்தை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சீனியர் சிட்டிசனுக்கான தகுதி விபரம்:
தகுதி:
நம் எந்த வகையான சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தாலும் அதற்கான தகுதி இருக்கும், அதனை தெரிந்து கொள்ள பிறகு தான் அந்த திட்டத்தில் நாம் பயன் அடைய முடியுமா, அடைய முடியாத என்ற முடிவுக்கு வர முடியும். அந்த வகையில் IDFC வங்கியில் உள்ள சீனியர் சேமிப்பு திட்டத்திற்கான தகுதிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம். மேலும் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
டிஜிட்டல் வங்கி கணக்கு தொடங்குவதற்கு:
ஆதார் எண்
பான் கார்டு
வங்கி கணக்கு தொடங்குவதற்கு:
ஆதார் அட்டை
கடவுச்சீட்டு
வாக்காளர் அடையாள அட்டை
புகைப்படத்துடன் நிரந்தர மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்
NREGA மூலம் வழங்கப்பட்ட வேலை அட்டை, மாநில அரசின் அதிகாரியால் முறையாக கையொப்பமிடப்பட்டது
பெயர் மற்றும் முகவரியின் விவரங்களைக் கொண்ட தேசிய மக்கள்தொகை பதிவேட்டால் வழங்கப்பட்ட கடிதம்.
IDFC பேங்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்தினால் அசலாக எவ்வளவு ரூபாய் வரை கிடைக்கும்..?
வட்டி:
இந்த திட்டத்தில் வருடத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சீனியர் சேமிப்பு திட்டத்திற்கு 7% வட்டி வழங்கப்படுகிறது.
டெபாசிட் தொகை:
சீனியர் சேமிப்பு திட்டத்தில் 10,000 ரூபாய் அல்லது 25,000 ரூபாய் குறைந்தபட்ச தொகையாக டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தில் டெபாசிட் காலமாக 5 வருடம் கொடுக்கப்படுகிறது.
5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
இந்த திட்டத்தில் நீங்கள் 50,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என்றால் 5 வருடத்தில் மொத்த வட்டி தொகையாக 17,500 ரூபாய் வழங்கப்படும்.
5 வருடம் கழித்து கணக்கை முடித்தால் மெச்சூரிட்டி தொகையாக 67,500 ரூபாய் கிடைக்கும்.
5 வருடத்தில் 4,28,197/- ரூபாய் சேமிக்க தினமும் இப்படி சேமித்து பாருங்க
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |