If you Save 1000 Rupees in Postal Department Rd Scheme You Can Get 1 Lakh
மனிதர்களின் வாழ்க்கையில் பணத்தை சம்பாதிப்பதை விட சேமிப்பது தான் ரொம்ப முக்கியம். பணத்தை சேமிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆனால் அதற்கான வழிகள் தான் தெரியவில்லை. அந்த வகையில் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தபால் துறையில் உள்ள RD திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Post Office Recurring Deposit Scheme:
இந்த Recurring Deposit திட்டத்தில் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், இந்த திட்டத்தின் முதிர்வு காலத்தில் அந்த தொகையும், அந்த தொகைக்கான வட்டியும் வழங்கப்படும்.
தகுதி:
இந்த திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
டெபாசிட் தொகை:
இதில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாயும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.
முதிர்வு காலம்:
இந்த திட்டத்தில் 5 வருட கால அளவு கொடுக்கப்படுகிறது. நீங்கள் விருப்பப்பட்டால் 5 வருடத்திற்கு பிறகு மேலும் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்து கொள்ளும் வசதி இருக்கிறது.
மேலும் 3 வருடம் கழித்து இந்த கணக்கை முடித்து கொள்ளலாம்.
வட்டி:
இதற்கான வட்டியாக 6.2% வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் அசத்தலான திட்டம்.. 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்..
மாதந்தோறும் 1000 ரூபாய் சேமித்தால் 5 வருடத்தில் எவ்வளவு தொகை கிடைக்கும்:
1000 ரூபாய் டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்திருந்தால், இந்த ஸ்கீமின் கால அளவான 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 60,000 ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். இந்த தொகைக்கு 10,432 ரூபாய் வட்டி வழங்கப்படும், ஆக மொத்த மெட்சூரிட்டி தொகை என்று பார்த்தால் உங்களுக்கு 70,432 ரூபாய்மொத்தமாக கிடைக்கும்.
5 வருடத்திற்கு மேல் கணக்கை நீட்டித்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:
டெபாசிட் செய்த தொகை | கால அளவு | மொத்த தொகை | வட்டி | மெட்சூரிட்டி |
Rs.1000/- | 6 | Rs.72,000/- | Rs.4878/- | Rs.87,310/- |
Rs.1000/- | 7 | Rs.84,000/- | Rs.5949/- | Rs.1,05,259/- |
Rs.1000/- | 10 | Rs.1,20,000/- | Rs.46,234/- | Rs.1,66,234/- |
போஸ்ட் ஆபீசில் மாதம் 3,000 ரூபாய் செலுத்தினால் போதும் 15,49,435 ரூபாய் பெறக்கூடிய சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |