Ind Super 400 Days Saving Scheme
நண்பர்களே நம்முடைய Pothunalam.com பதிவில் ஒவ்வொரு நாளுக்கும் வங்கி மற்றும் போஸ்ட் ஆபிஸ் அறிவிக்கும் திட்டங்களை பற்றி தெரிந்துகொண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று IND Super 400 Days Saving திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. பொதுவாக பணம் இருந்தால் அதனை எதில் முதலீடு செய்யலாம், அதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் அல்லது வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாமா என்று கேள்விகளும் இருக்கும். ஆகவே உங்களுக்கான அருமையான திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Ind Super 400 Days Saving Scheme:
இந்த திட்டத்தை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது. Ind Super 400 Days Saving திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இது ஒரு Fixed Deposit திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்களோ அந்த தொகை 400 நாட்களுக்கு பிறகு வட்டி தொகையை பெறலாம்.
இந்த திட்டத்தில் சராசரியாக வட்டியை விட பெண்களுக்கு அதிக வட்டி நிர்ணயம் செய்துள்ளார்கள்.
முதலீடு:
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் குறைந்தபட்சமாக 10,000 முதல் அதிகபட்சமாக 2 கோடி வரை முதலீடு செய்யலாம்.
இதில் முதலீடு செய்ய நினைத்தால் ஏப்ரல் 30 வரை தான் கடைசி தேதி, அதற்குள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறவும்.
இதையும் படியுங்கள்⇒ 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும் 1,43,226 ரூபாய் பெறக்கூடிய சிட்டி யூனியன் பேங்கின் அருமையான திட்டம்
வட்டி:
இந்த திட்டத்தில் எவ்வளவு வட்டி என்றால் General Public அதாவது 60 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 7.10 வட்டியாகவும், பெண்களுக்கு 7.15 சதவீதம் வட்டியாகவும் பெறுவார்கள்.
Senior Public அதாவது 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 7.60 சதவீதம் வட்டியாகவும், பெண்களுக்கு 7.65 சதவீதம் வட்டியாகவும் பெறுவார்கள்.
மேலும் Super Senior Public அதாவது 80 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 7.85 சதவீதம் வட்டியாகவும், பெண்களுக்கு 7.90 சதவீதம் வட்டியாகவும் பெறுவார்கள்.
அடுத்து இந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக காண்போம் வாங்க..!
General Public:
யாருக்கு | டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
ஆண்கள் | Rs.5,00,000/- | Rs.40,029/- | Rs.5,40,029/- |
பெண்கள் | Rs.5,00,000/- | Rs.40,319/- | Rs.5,40,319/- |
இதையும் படியுங்கள்⇒ 5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலைய அசத்தலான திட்டம்..
Senior Public:
யார்க்கு | டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
ஆண்கள் | Rs.5,00,000/- | Rs.42,938/- | Rs.5,42,938/- |
பெண்கள் | Rs.5,00,000/- | Rs.43,230/- | Rs.5,43,230/- |
Super Senior Public:
யார்க்கு | டெபாசிட் தொகை | வட்டி தொகை | மொத்த தொகை |
ஆண்கள் | Rs.5,00,000/- | Rs.44,397/- | Rs.5,42,938/- |
பெண்கள் | Rs.5,00,000/- | Rs.44,690/- | Rs.5,43,230/- |
இதையும் படியுங்கள்⇒ 5 வருடத்தில் Rs.14,50,000/- தரும் தபால் நிலைய அசத்தலான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |