Indian Bank PPF Account Details in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளித்து ஒரு குடும்பத்தை எந்த ஒரு பொருளாதார பிரச்சனையும் ஏற்படாமல் சீராக நடத்தி செல்வது என்பது மிக கஷ்டமாக உள்ளது. இன்னும் காலம் அதிகரிக்க அதிகரிக்க இந்த பொருளாதாரமும் அதிகரிக்கும் என்பதை அனைவரும் மனதில் வைத்து கொண்டு அனைவருமே தங்களின் எதிர்காலத்திற்காக சேமிக்க தொடங்கிவிட்டார்கள். ஆனால் இன்றைய சூழலிலும் ஒரு சிலருக்கு சேமிப்பது பற்றிய சில கேள்விகள் உள்ளது. அப்படிபட்டவர்கள் உதவும் நோக்கத்தில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியின் PPF திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Indian Bank PPF Scheme Details in Tamil:
இந்தியன் வங்கியின் PPF கணக்கு என்பது கணிசமான வருமானம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கும் பிரபலமான நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த இந்தியன் வங்கியின் PPF திட்டமானது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகிறது.
தகுதி:
இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும்.
இந்திய குடியுரிமை இல்லாத யாரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியாது.
மாதம் 55 ரூபாய் செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் 3000 அளிக்கும் திட்டம்
வட்டி விகிதம்:
இந்த திட்டத்தில் உங்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.
சேமிப்பு தொகை:
இந்த திட்டத்தில் நீங்கள் 500 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
பதவிக்காலம்:
இதில் நீங்கள் 15 வருடங்கள் சேமிக்க வேண்டும்.
நன்மைகள்:
இந்த திட்டத்திற்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருமானம் முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தை தொடங்கிய 3-வது முதல் 6-வது நிதியாண்டுகளில் கடன் பெற்று கொள்ள முடியும்.
அதுபோல் 5-வது நிதியாண்டில் இருந்து பகுதியளவு திரும்பப் பெற முடியும்.
முதிர்வு காலத்திற்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீடித்து கொள்ள முடியும்.
FD திட்டத்தில் 2,00,000 செலுத்தினால் SBI வங்கியில் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் தெரியுமா
வருமானம்:
உதாரணத்திற்கு இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் 1,000 ரூபாய் சேமிக்கிறீர்கள். அதாவது வருடத்திற்கு 12,000 ரூபாய் என 15 வருடங்களுக்கு சேமிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம்.
அதாவது நீங்கள் 15 வருடங்களுக்கு மொத்தமாக 1,80,000 ரூபாயை சேமிப்பீர்கள். இப்பொழுது 15 வருடங்கள் முடிவில் உங்களுக்கு நீங்கள் சேமித்த 1,80,000 ரூபாய்யுடன் 1,45,457 ரூபாய் வட்டியும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 3,25,457 முதிர்வு தொகையாக கிடைக்கும்.
தபால் துறையில் மாதம் 500 ரூபாய் செலுத்தினால் 30,00,000 ரூபாய் வரை கிடைக்கும் சூப்பரான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |