Indian Bank Sukanya Samriddhi Account
இந்தியாவில் உள்ள பழமையான வங்கிகளில் ஒன்றாக திகழும் இந்தியன் வங்கி பொதுமக்களுக்கு பலவகையான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. அத்திட்டங்களில் ஒன்றான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் விவரங்களை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். நாம் அனைவருமே ஏதோவொரு தேவைக்காக பணத்தை சேமித்து வைக்க வங்கிகளை நாடி செல்வோம். ஏனென்றால் வங்கிகளில் பல சேமிப்பு திட்டங்களும் பாதுகாப்பும் உள்ளது. அப்படி நாம் சேமித்து வைப்பதற்கு என்னென்ன சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது.? எதில் சேமித்தால் அதிக வட்டி பெறலாம்.? போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். எனவே உங்களுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் வங்கியில் உள்ள சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு திட்டத்தினை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Sukanya Samriddhi Account Details in Tamil:
இத்திட்டத்தின் நோக்கம்:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் உருவாக்கப்பட்ட இத்திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியை நோக்கமாக கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பெண்குழந்தையின் பெயரில் கணக்கை திறக்கலாம்.
வயது தகுதி:
இத்திட்டத்தில், 10 வயது வரை உள்ள பெண்குழந்தைகளின் பெயரில் கணக்கை திறக்கலாம்.
பதவி காலம்:
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், டெபாசிட் செய்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் வரை பதவிக்காலம் உள்ளது.
திரும்ப பெறுதல்:
பெண்குழந்தைக்கு 18 வயது நிரம்பியதுடன், இத்திட்டத்தில் நீங்கள் டெபாசிட் செய்த தொகையினை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.
90 நாட்களுக்கு ஒரு முறை Rs. 3,075/- வட்டி தொகையினை அளிக்கும் Indian Bank சேமிப்பு திட்டம்..!
வட்டி விகிதம்:
இந்தியன் வங்கியில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 8% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது.
டெபாசிட் தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வருடாந்திர டெபாசிட் தொகை | டெபாசிட் காலம் | செலுத்திய மொத்த தொகை | வட்டித்தொகை | கிடைக்கக்கூடிய மொத்த தொகை |
10 ஆயிரம் | 15 ஆண்டுகள் | 1,50,000 ரூபாய் | 2,98,969 ரூபாய் | 4,48,969 ரூபாய் |
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் விவரங்களின் படி, நீங்கள் ஒரு வருடத்திற்கு 10 ஆயிரம் என 15 வருடத்திற்கு 1,50,000 ரூபாய் டெபாசிட் செய்தால் 18 வயது பூர்த்தி அடைந்ததும் வட்டித்தொகையுடன் சேர்த்து 4,48,969 ரூபாய் பெறலாம்.
குறிப்பு: நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையினை பொறுத்து வட்டித்தொகை மாறுபடும்.
114 ரூபாய் செலுத்தினால் 2 லட்சம் கிடைக்கும் திட்டம் பற்றி தெரியுமா.?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |