Indian Overseas Bank Senior Citizen Scheme
பொதுவாக மூத்த குடிமக்களுக்கு தான் அனைவருடைய வீட்டிலும் முதல் அங்கீகாரம் அளிக்கப்படும். அதேபோல் இந்த செயல் மற்றும் பங்களிப்பாக இருந்தாலும் அவர்களுக்கு கூடுதலான சலுகையும் மற்றும் பொறுப்புகளும் வழங்கப்படும். அந்த வகையில் சேமிப்பு திட்டங்களிலும் வட்டி விகிதம் ஆனது மூத்த குடிமக்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உள்ள சீனியர் சிட்டிசனிற்கான திட்டத்தினை பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் சீனியர் சிட்டிசன் திட்டம்:
வயது தகுதி:
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது மூத்த குடிமக்களில் நலன் கருதி அவர்களுக்கு என்று தன்னிச்சையாக சீனியர் சிட்டிசன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த திட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.
முதலீடு தொகை:
சீனியர் சிட்டிசனிற்கான இந்த திட்டத்தில் உங்களுக்கான குறைந்தப்பட்ச முதலீடு தொகை 1,000 ரூபாய் ஆகும். மேலும் இதில் அதிகபட்ச தொகை என்பது 15 லட்சம் ரூபையாகும்.
வட்டி விகிதம்:
இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 8.20% வரை அளிக்கப்படுகிறது. மேலும் இதில் உங்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமானது முற்றிலும் தோராயமானது. ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் இதில் மாற்றம் வரும்.
முதிர்வு காலம்:
இதில் உங்களுக்கான முதிர்வு காலம் 5 வருடம் ஆகும். மேலும் இந்த 3 வருடம் நீடித்தபிறகு உங்களுக்கு இதே திட்டத்தில் நீடித்துகொள்ளலாம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
ஒருவேளை இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பிறகு பாதிலேயே கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு 1 வருடம் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
New Scheme👇👇 மாதம் 1500 ரூபாய் சேமித்தால் 10 லட்சம் பெறலாம் அருமையான சேமிப்பு திட்டம்
SCSS in IOB Bank Scheme in Tamil:
மேலே சொல்லப்பட்டுள்ள முறைகளின் படி சீனியர் சிட்டிசன் இந்த திட்டத்தில் குறிப்பிட்ட தொகையினை முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முதலீடு தொகை | முதிர்வு காலம் | மூன்று மாதத்திற்கான வட்டி தொகை | மொத்த வட்டி தொகை | மொத்த தொகை |
Rs. 1,000/- | 5 வருடம் | Rs. 20/- | Rs. 410/- | Rs. 1,410/ |
Rs. 5,000/- | 5 வருடம் | Rs. 102/- | Rs. 2,050/- | Rs. 7,050/- |
Rs. 1,00,000/- | 5 வருடம் | Rs. 2,050/- | Rs. 41,000/- | Rs. 1,41,000/- |
Rs. 2,00,000/- | 5 வருடம் | Rs. 4,100/- | Rs. 82,000/- | Rs. 2,82,000/- |
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் டெபாசிட் தொகை மாறும் போது அதற்கு ஏற்றவாறு அசல் தொகையும் மாறுபடும்.
New Scheme👇👇 மாதந்தோறும் 50 ரூபாய் சேமிக்கும் அருமையான Rd திட்டம்..
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |