Indian post office saving scheme tamil
பொதுவாக நம்மிடம் சேமிப்பு என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆக நமது செலவுகள் போக சிறிய அளவில் சேமித்து அதனை எதாவது முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தோம் என்றால் அது நமக்கு எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டும் இல்லாமல் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டி நமக்கு தரப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 6000 ரூபாய் வழங்கப்படும் ஒரு அஞ்சலக சேமிப்பு திட்டத்தை பற்றி தான் நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிரம். சரி வாங்க அது என்ன சேமிப்பு திட்டம் என்று இப்பொழுது பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் ரூ.6000/- தரும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம்..!
ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்து அந்த முதலீடு செய்த தொகைக்கான வட்டியை மட்டும் மாதம் மாதம் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்த ஸ்கீமில் நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்கின்றிர்களோ அதனுடைய தொகையின் வட்டியை ஒவ்வொரு மாதமும் உங்கள் அக்கௌன்டில் கிரெடிட் செய்வார்கள்.
மேலும் இந்த ஸ்கீமினுடைய கால அளவு முடிந்த பிறகு நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்திர்களோ அந்த தொகையை உங்களுக்கு வழங்குவார்கள்.
இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இந்திய குடிமக்களும் முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் Rs.5000/- தரும் மகத்தான திட்டம் உடனே சேருங்கள்
மைனர் அக்கௌன்ட் என்றால் அந்த குழந்தையின் பெற்றோர் இந்த கணக்கை ஓபன் செய்யலாம். மேலும் ஜாயிண்ட் அக்கவுண்டாக மூன்று நபர் இணைந்தும் இந்த அசவுண்ட்டை ஓபன் செய்யலாம்.
இந்த முதலீட்டு திட்டத்தில் கணக்கு ஓபன் செய்வதற்கான குறைந்தபட்ச தொகை 1000 அதுவே சிங்கிள் அக்கௌன்ட் என்றால் அதிகட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். ஜாயிண்ட் அக்கௌன்ட் என்றால் அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
MIS பொறுத்தவரை நீங்கள் இந்த திட்டத்தில் ஒரே ஒரு முறை மட்டும் ஒரு தொகையை முதலீடு செய்தால் போதும், ஸ்கீமினுடைய இடைப்பட்ட காலத்தில் நீங்கள் எந்த ஒரு தொகையும் அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஸ்கீமினுடைய கால அளவு ஐந்து வருடம் ஆகும். மேலும் இதற்கு வழங்கப்படும் வட்டி தற்பொழுது 7.40% ஆகும். இந்த ஸ்கீமினுடையய ஐந்து வருடம் வரை நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்தீர்களோ அதனை பொறுத்து ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
டெபாசிட் தொகை | மாதம் வழங்கப்படும் வட்டி | மொத்த வட்டி | மொத்த தொகை |
1 லட்சம் | 616 | 37,000 | 1,37,000 |
3 லட்சம் | 1850 | 1,11,000 | 4,11,000 |
5 லட்சம் | 3083 | 1,18,000 | 6,18,000 |
10 லட்சம் | 6166 | 3,70,000 | 13,70,000 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வங்கியில் 2000 சேமித்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |